Published:Updated:

ரூ.1-க்கு 4.66 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கும் ஸொமேட்டோ நிறுவனம்..!

ஸொமேட்டோ
News
ஸொமேட்டோ

ஊழியர்களுக்கு ஸொமேட்டோ நிறுவனம் வழங்கும் பங்குகளின் மதிப்பு 190 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் தேவைப்பட்டால் ஓப்பன் மார்க்கெட்டில் பங்குகளை விற்று பணமாக்கிக் கொள்ள முடியும்.

ரூ.1-க்கு 4.66 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கும் ஸொமேட்டோ நிறுவனம்..!

ஊழியர்களுக்கு ஸொமேட்டோ நிறுவனம் வழங்கும் பங்குகளின் மதிப்பு 190 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் தேவைப்பட்டால் ஓப்பன் மார்க்கெட்டில் பங்குகளை விற்று பணமாக்கிக் கொள்ள முடியும்.

Published:Updated:
ஸொமேட்டோ
News
ஸொமேட்டோ

ஓட்டல்களிலிருந்து உணவு சப்ளை செய்யும் ஸொமேட்டோ நிறுவனம் தமது ஊழியர்களுக்கு 4.66 கோடி பங்குகளை பங்கு ஒன்றை ஒரு ரூபாய்க்கு வழங்க இருக்கிறது. பொதுவாக முன்னணி நிறுவனங்கள் தமது ஊழியர்களை தக்க வைக்கும் பொருட்டு பங்குகளை குறைந்த விலையில் வழங்குவது வாடிக்கையாகும்.

இந்தியப் பங்குகள்!
இந்தியப் பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவ்வாறு சலுகை விலையில் கிடைக்கும் பங்குகளை பெறும் ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் தேவைப்பட்டால் ஓப்பன் மார்க்கெட்டில் பங்குகளை விற்று பணமாக்கிக் கொள்ள முடியும்.

தற்போது ஊழியர்களுக்கு ஸொமேட்டோ நிறுவனம் வழங்கும் பங்குகளின் மதிப்பு 190 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்ற ஆண்டு புதிய பங்கு மூலதன வெளியீட்டின் மூலம் ஸொமேட்டோ நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கின் விலையாக 76 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் பங்குகள் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 42 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இந்தப் இந்த நிலையில் அதிக அளவு பங்குகளை தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் வழங்க இருக்கிறது.

இவ்வாறு பங்குகளை பெறும் ஊழியர்கள் குறைந்தப்பட்சம் ஓராண்டுக்கு அந்த பங்குகளை விற்க முடியாது. தற்போது ஸொமேட்டோ நிறுவனம் புதிய பங்குகளை வெளியிட்டு ஓர் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. அந்த நிறுவனம் பங்குகளை வெளியிடும் பொழுது அதனை வாங்கிய தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் ஒரு ஆண்டிற்கு பங்குகளை விற்க முடியாது என்ற அடிப்படையில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தனர்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்
vikatan

தற்போது பங்கு வெளியீடு முடிவடைந்து ஒரு வருட காலம் முடிவடைய இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை அந்த முதலீட்டாளர்கள் விற்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் சோமாடோ நிறுவனம் தமது ஊழியர்களுக்கு பங்குகளை வழங்க முன்வந்திருக்கிறது.

இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பங்குகள் போஸாக வழங்கப்படும். அந்த நிறுவன பங்குகளை பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் விற்காமல் தொடர்ந்து வைத்துள்ளனர்.

அவ்வாறு பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்து இருந்த காரணத்தினால் அந்த நிறுவன பங்குகள் விலை கணிசமாக ஏற்றம் கொண்டுள்ளது. அதனால் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பல ஊழியர்கள் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பிற்கு பங்குகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிறுவனமும் வளர்ச்சி அடையும்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஊழியர்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று குறைந்த விலையில் பங்குகள் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

Zomato
Zomato

தற்போது ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் குறைந்த விலையில் வர்த்தகம் ஆனாலும் வரும் காலத்தில் நூறு ரூபாய் அளவிற்கு அதன் பங்கு விலை உயரும் என்று முன்னணி வெளிநாட்டு பங்கு தரகு நிறுவனமான ஜெப்ரீஸ் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் பல நிறுவன பங்குகள் கணிசமாக சரிந்து வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை ஏற்றம் காணும் பொழுது நல்ல நிறுவன பங்குகள் மீண்டும் புதிய உச்சத்தை அடைவதை பல தருணங்களில் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் முன்னணி நிறுவனமான ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகளும் விலை ஏறும். அந்த நிறுவனப் பங்குகளை ஒரு ரூபாய்க்கு பெற்ற அதன் ஊழியர்களுக்கு நல்ல லாபத்தை அது பெற்றுத் தரும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.