Published:Updated:

OYO மீது செபியிடம் புகார் அளித்துள்ள ஜோஸ்டல் நிறுவனம்; திட்டமிட்டபடி IPO வெளியாகுமா?

OYO
News
OYO

ஓயோவின் வருவாயில் 43% இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து வருகிறது. 28% ஐரோப்பாவிலிருந்து வருகிறது. மீதமுள்ளவை மற்ற உலகச் சந்தைகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:

OYO மீது செபியிடம் புகார் அளித்துள்ள ஜோஸ்டல் நிறுவனம்; திட்டமிட்டபடி IPO வெளியாகுமா?

ஓயோவின் வருவாயில் 43% இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து வருகிறது. 28% ஐரோப்பாவிலிருந்து வருகிறது. மீதமுள்ளவை மற்ற உலகச் சந்தைகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

OYO
News
OYO

உலகளாவிய டிராவல் நிறுவனமான ஓயோ ஹோட்டல்ஸ் அண்டு ஹோம்ஸ் ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம் சுமார் ரூ. 8,430 கோடி வரை நிதி திரட்ட செபி அமைப்பிடம் டி.ஆர்.ஹெச்.பி (DRHP) ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கும் நிலையில், அந்த டி.ஆர்.ஹெச்.பி ஆவணங்கள் சட்ட விரோதமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஜோஸ்டல் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செபியிடம் புகார் தெரிவித்துள்ளது.

Hotel - Representational Image
Hotel - Representational Image
Pixabay

98 பக்கங்கள் கொண்ட தனது புகார் ஆவணத்தை செபியிடம் சமர்பித்துள்ள ஜோஸ்டல் நிறுவனம், அதில், ``ஓயோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓராவல் ஸ்டேட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலதன அமைப்பு சரியாக இல்லாத காரணத்தால், ஐ.பி.ஓ வெளியீட்டை அந்த நிறுவனத்தால் முறையாகக் கையாள முடியாது. அதனால் இந்த ஐ.பி.ஓ வெளியீட்டிற்கு அனுமதி வழங்கக்கூடாது" என தெரிவித்துள்ளது.

மேலும், செபியின் விதிமுறை 5 (2) - Capital and Disclosure Requirements Regulations, 2018 (ICDR Regulations)- ஐ மேற்கோள் காட்டி டி.ஆர்.ஹெச்.பியை ஓயோ தாக்கல் செய்வது சட்டவிரோதமானது என்றும் ஜோஸ்டல் நிறுவனம் கூறியுள்ளது.

பங்குதாரர்களின் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்வதன்மூலம், நிதியைத் திரட்ட ஓயோ நிறுவனம் முடிவு செய்திருந்தது.

ஸொமேட்டோ ஐ.பி.ஓ வெளியீட்டை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளில் புதிய பங்கு வெளியீட்டிற்கு வரவேற்பு அதிகரித்திருக்கும் நிலையில், ஓயோ நிறுவனத்திற்கு ஜோஸ்டல் நிறுவனம் போட்டிருக்கும் முட்டுக்கட்டை ஓயோ நிறுவனத்தின் இமேஜை காலி செய்வதற்காககூட இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

அதே சமயம், ``ஜோஸ்டல்ஸ் நிறுவனம் செபி அமைப்பிடம் புகார் தெரிவித்திருக்கிறதே தவிர, செபியிடம் இருந்து இது சார்ந்த அதிகாரபூர்வத் தகவல்கள் இன்னும் வரவில்லை. `ஓயோ நிறுவனம் சட்டவிரோதமாக டி.ஆர்.ஹெச்.பி ஆவணங்களை பதிவு செய்திருக்கிறது. அது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்' என செபி அமைப்பு தரப்பில் தகவல் வெளியானால், ஓயோ நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதில் சிக்கல் உருவாகும். அப்படி இல்லையெனில், எந்தப் பிரச்னையும் இல்லை" என பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் , ஓயோவின் வருவாயில் 43% இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து வருகிறது. 28% ஐரோப்பாவிலிருந்து வருகிறது. மீதமுள்ளவை மற்ற உலகச் சந்தைகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.