மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா?

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா?

டாக்டர் சங்கர சரவணன்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா?

பொதுப் புத்தியில் உரசிப் பாருங்கள்

சில நேரங்களில் சில கருத்துகளை வாசிக்கும்போது, அந்தக் கருத்தை நாம் சரியாக உள்வாங்கிக்கொள்கிறோமா என்பது முக்கியம். அவ்வாறு நாம் சரியாக உள்வாங்கிக்கொண்டால், கேள்வியை எவ்வளவுதான்  குழப்பிக் கேட்டாலும் சரியாகப் பதில் சொல்ல முடியும்.

ஆங்கிலத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அந்த விஷயத்துக்கு நேர்மாறாகச் சொல்லப்படும் விஷயம் உண்மை அல்ல (Vice versa) என்பார்கள்.  உதாரணமாக, புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் கறுப்பாக இருப்பார் என்பது உண்மை. ஆனால், அதை வைத்துக்கொண்டு கறுப்பான நடிகர்கள் எல்லோரும் புகழ் பெறுவார்கள் என்று சொல்ல முடியாது. இங்கே முதலில் சொன்ன வாக்கியமானது (ரஜினிகாந்த் கறுப்பு) உண்மை. ஆனால், அந்தக் கருத்தை நேர்மாறாக்கிக் கூறப்பட்ட இரண்டாவது வாக்கியம் உண்மையல்ல. மேலும், நாம்  வாசிக்கும் ஒரு வாக்கியம் தர்க்க ரீதியாக (Logically) சரியாக இருக்கிறதா என்பதை நம் பொதுப் புத்தியில் உரசி (By Applying our Commonsense) உணர்ந்துகொள்ள வேண்டும். இப்போது கீழே உள்ள பத்தியைக் கவனிப்போம்...

‘‘The conceptual difficulties in National comparisons between underdeveloped and industrialised countries are particularly serious because, a part of the national output in various underdeveloped countries is produced without passing through the commercial channels’’

In the above statement, the author implies that:

(a)     the entire national output produced and consumed in industrialized countries passes through commerical channels.

(b)     the existence of a non-commercialized sector in different underdeveloped countries renders the national income comparisons over countries difficult

(c)     no part of national output should be produced and consumed without passing through commercial channels

(d)     a part of the national output being produced and consumed without passing through commercial channels is a sign of underdevelopment.

தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளையும் மேம்பாடு அடையாத நாடுகளையும் ஒப்பிடுவதில் இருக்கும் முக்கியமான சிக்கல் பற்றி இந்தப் பத்தியில் பேசப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம், மேம்பாடு அடையாத நாடுகளில் தேசிய உற்பத்தியின் ஒரு பங்கு, வணிகம்சாரா வழிகளில் இருந்து வருவதுதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பத்தியில் இடம்பெற்றுள்ள இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையாக B-யைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், விடை A-யில் இடம்பெற்ற கருத்து, B-யில் இடம்பெறும் கருத்துக்கு நேர்மாறாக இருப்பதால், அதை இந்தப் பத்தியில் இருந்து நாம் பெற முடியாது. அதாவது, விடை A-யில் தொழில்ரீதியாக முன்னேறிய நாடுகளில், தேசிய உற்பத்தி முழுவதும் வர்த்தக வழிகளின் மூலமாகவே நகர்கிறது என்ற கருத்து ஏற்புடையதல்ல.”

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா?



ஆக, ஒரு வாக்கியம் தர்க்க ரீதியாக (Logically) சரியா என்பதை நாம் பொதுப் புத்தியில் உரசிப் பார்த்தால் மட்டுமே சரியான விடைகளை எளிதாகத் தேர்ந்தெடுத்துத் தரமுடியும்.

  பாலின இடைவெளி குறியீட்டெண்


இந்தியப் பொருளாதாரப் பாடத்தில் கேட்கப் படும் கேள்விகளுக்குச் சிறப்பான முறையில் விடையளிப்பதற்குத் தேர்வர்கள், மத்திய அரசின் நிதித் துறை ஆண்டுதோறும் வெளியிடும் பொருளாதார ஆய்வறிக்கையைப் படிக்க வேண்டியது அவசியம். மேலும், உலகப் பொருளாதார நிறுவனங்கள் குறித்தும் அவை வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில், பாலின இடைவெளி குறியீட்டெண்ணை வெளியிடும் அமைப்பு எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் குறியீட்டு எண்ணை World Economic Forum வெளியிடுகிறது.

  மூன்று வகைப் பொது அறிவு

போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவுக் கேள்விகளில் மூன்று வகை உண்டு. அவை, நினைவாற்றல் சார்ந்த கேள்விகள், கருத்தாக்கம் சார்ந்த கேள்விகள், பயன்பாடு சார்ந்த கேள்விகள் என்பன ஆகும்.

இந்தியப் பொருளாதாரப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மூன்று வகை கேள்விகளுக்கும் ஒவ்வொரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு, நிதியாண்டை ஏப்ரல் 1-லிருந்து ஜனவரி 1-க்கு மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செய்தியானது நாளிதழ்களில் வெளியாகும்போது, அந்தச் செய்தியை ஆழமாகப் படித்துப் புரிந்துகொள்பவர்கள், பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

1. இந்தியாவில் ஏப்ரல் 1-ல் நிதியாண்டு தொடங்கும் வழக்கம் எந்த ஆண்டு முதல் நடைமுறையில் இருந்துவருகிறது?

2. அமெரிக்காவில் நிதியாண்டு தொடக்கம் எந்த மாதமாக உள்ளது?

3. இப்போது இந்திய அரசு நிதியாண்டு தொடக்கத்தை ஜனவரி 1-க்கு மாற்றியமைப்பதற்கு முன்வைக்கும் காரணங்கள் யாவை?

இந்தக் கேள்விகளைப் பார்க்கும்போதே இந்தக் கேள்விகளின் தன்மை உங்களுக்குப் புரிந்திருக்கும். இதற்கான விடையை அடுத்த வாரம் பார்ப்போம். 

(தேர்வு தொடரும்)