மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி!

டாக்டர் சங்கர சரவணன்

ஐ.ஏ.எஸ் தோ்வுக்குப் படிப்பவா்கள் தேசிய ஆங்கில நாளிதழ்களைத் தவறாமல் படிக்க வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் அறிவுரை. செய்தித்தாளைப் படிப்பது வெறும் தகவல் திரட்டுதலுக்காக மட்டுமின்றி, செய்தியைப் படித்து உள்வாங்கி அதன் உய்பொருளை (most rational inference) உணர்கிற அளவுக்குத் தோ்வு எழுதுபவர்களின் அறிவு, கூா்மையாக வேண்டும். தொடா்ந்து ஆங்கிலச் செய்தித்தாளை வாசித்து, அதிலுள்ள செய்திகளை உள்வாங்கி, அந்தச் செய்திகளில் சொல்லப்பட்ட பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும்போதுதான் தோ்வு எழுதுபவர்களின் புரிதிறனும், புத்திக்கூா்மையும் அதிகரிக்கிறது. உதாரணமாக, 2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பார்ப்போம்.   

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி!

By 2020, when the global economy is expected to run short of 56 million young people, India with its youth surplus of 47 million, could fill the gap. It is in this context that labour reforms are often cited as the way to unlock double-digit growth in India. In 2014, India’s labour force was estimated to be about 40 per cent of the population, but 93 per cent of this force was in unorganized sector. Over the last decade, the compound annual growth rate (CAGR) of employment has slowed to 0.5 per cent, with about 14 million jobs created during last year when the labour force increased by about 15 million.

1. Which of the following is the most rational inference from the above passage?

a) India must control its population growth so as to reduce its unemployment rate.

b) Labour reforms are required in India to make optimum use of its vast labour force productively.

c) India is poised to achieve the double-digit growth very soon.

d) India is capable of supplying the skilled young people to other countries.

இந்தக் கேள்வி 2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்டது. மேலே உள்ள பத்தியையும், வினாவையும் படித்தவா்கள் கேள்வியின் ஜீவநாதம் எது என்று யோசிக்கத் தொடங்கியிருப்பீா்கள். இந்த ஆண்டு தோ்வு எழுதிய மாணவா் ஒருவா், இந்தக் கேள்விக்கு சரியான விடை B அல்லது D ஆகிய இரண்டில் எது என்ற சந்தேகத்துடன் என்னை அணுகினார். பத்தியையும் வினாவையும் படித்துவிட்டு, விடையைப் பார்க்கும்போது, சா்ச்சையில்லாத விடை D-தானோ என்றும் தோன்றியது.

ஆனால், கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும் பொழுது D-தான், பத்தியில் நேரடியாகவே பேசப்பட்டுவிட்டதே, இந்தப் பத்தியிலிருந்து நாம் உணா்ந்து கொள்ளும் மிக முக்கியமான பகுத்தறிவுக்கேற்ற உய்பொருள் என்றல்லவா கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் விடை B-தானே சரியாக இருக்கும் என்றும் தோன்றியது.

மேலும் யோசிக்கும்போது, B-யை விடையாகக் கொள்வதானால், பத்தியின் முதல் மூன்று/ஐந்து  வரிகளைப் படித்த உடனேயே விடையைச் சொல்லிவிடலாமே. அதற்குப் பின் வரும் வரிகள் எதற்கு என்றும் தோன்றியது. ஒருவேளை, தோ்வு எழுதுபவர்களைக் குழப்புவதற்காக இருக்குமோ என்றும் தோன்றியது.

2020-ல் உலகப் பொருளாதார வளத்தில் 56 மில்லியன் இளைஞா் வளப் பற்றாக்குறை ஏற்படும். அப்போது இந்தியா 4.7 கோடி இளைஞா்கள் வளத்தை உலகுக்கு வழங்கக் கூடிய வல்லமை பெற்றதாக இருக்கும். 2014-ம் ஆண்டு இந்தியாவில் தொழிலாளா் சக்தி, மொத்த இந்திய மக்கள் தொகையில் 40% என்று கணக்கிடப்படப்பட்டது. ஆனால், இந்த தொழிலாளா் சக்தியில் 93% போ் அமைப்புசாரா தொழில்களில்தான் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பில் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதம் 0.5%  குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் 1.4 கோடி  பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டபோதிலும், வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை (தொழிலாளா் சக்தி) 1.5 கோடியாக இருந்ததால் வேலைவாய்ப்பு வளா்ச்சியில் பற்றாக்குறை ஏற்பட்டது.

தொழிலாளா் சக்தி அதிகரிப்புக்கேற்ப புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தொழிலாளா் சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்தி, நம்மிடம் உள்ள இளைஞா்கள் சக்தியின் திறமையை வளா்த்து, உலகெங்கிலும் வேலைவாய்ப்பு பெறும் சக்தியுடையவா்களாக அவா்களை உயா்த்த வேண்டும் என்பது, மேற்கண்ட பத்தியைப் படிக்கிறபோது, நாம் உணா்ந்துகொள்ளும் மிக முக்கியமான பகுத்தறிவுக்கேற்ற உட்கருத்தாக உள்ளது. எனவே, B-தான் சரியான விடை என்று நான் கூறிய விளக்கத்தைக் கேட்டு அந்த மாணவா் சென்றுவிட்டார்.

இருந்தாலும், அவருக்கு நான் சொன்ன விளக்கம் சரிதானா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. எனவே, இந்தச் செய்தியைக் குறித்து மேலும் இணையத்தில் தேடுவதற்காக, இந்தப் பத்தியில் பயன்படுத்தியுள்ள மிக முக்கியமான திறவுச்சொல் எது என்று ஆராய்ந்து, to unlock double digit growth என முடிவு செய்து அதை  கூகுளில் தேடினேன். அந்தத் திறவுச்சொல் என்னை நேரடியாக 2015-ல், நாடாளுமன்ற எம்.பி- யான வருண்காந்தி பிரபல ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு இட்டுச் சென்றது. என்ன ஆச்சர்யம், அந்தக் கட்டுரையிலிருந்துதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி!



அடுத்து, தொழிலாளா் நலன் பற்றிய பிரச்னைக்கு வருவோம். உலக வங்கி குழுமத்தால் (World Bank Group) ஆண்டுதோறும் சுலப வா்த்தகச் சூழல் குறியீட்டு எண் (Ease of doing business index) வெளியிடப்படுகிறது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் சற்றுப் பின்தங்கியுள்ளது (135-வது இடம்). இதற்கு முக்கியக் காரணம், இந்தியா வில் தற்போது நடப்பில் உள்ள சிக்கலான தொழிலாளா் சட்டங்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது 44 தொழிலாளா் சட்டங்கள் உள்ளன எனவும், அவற்றை ஒருங்கிணைத்து நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்ற முடியும் என்றும், அப்படி மாறும்போது தொழிலாளா் நலன் மேம்பட்டு வா்த்தகச் சூழல் சிறக்கும் என்றும் பொருளாதார வல்லுநா்கள் சிலா் கூறிவருகின்றனா். அப்படிச் செய்தால்தான் சுலப வா்த்தகச் சூழல் குறியீட்டு எண்ணில் இந்தியா முன்னேறிச் செல்லும் என்ற கருத்தும் உள்ளது. 

ஆனால், இருக்கிற தொழிலாளா் சட்டங்களால் தொழிலாளா்கள் பெறத்தக்க பயன்களையே பல நிறுவனங்கள் சரிவர வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு, மத்தியக் கணக்குத் தணிக்கையின் (CAG) அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு சலுகைகள் சட்டங்களின் கீழ் பெண் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு சலுகைகளையே பல கம்பெனிகள் வழங்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

நம் நாட்டில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 12,000 கம்பெனிகளில் குஜராத்தில் 500 கம்பெனிகளும், தமிழகத்தில் சுமார் 3,000 கம்பெனி களில் மட்டுமே பெண் தொழிலாளா்களின்  குழந்தைகளுக்கான காப்பக வசதி செய்து தரப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. நிலைமை இப்படியிருக்க, சுலப வணிகச் சூழலை ஏற்படுத்துவதற்காகத் தொழிலாளா் நலச் சட்டங்களை இன்னும் தளா்த்தினால் அது சரிப்பட்டு வருமா என்று கேட்கின்றன தொழிலாளா் உரிமை குறித்து குரல் எழுப்பும் தொழிற் சங்கங்களும், அமைப்புகளும். சி.ஏ.ஜி அறிக்கையின்படி தமிழகத்தில் 3000-க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் குழந்தைகள் காப்பகம் இருப்பது நமக்குப் பெருமைதான்.

(தேர்வு தொடரும்)

கலைச்சொற்கள்

1. சுலப வர்த்தகச் சூழல் குறியீட்டு எண் (Ease of Doing Business Index)


இந்தக் குறியீட்டின் வரலாறு 2002-லிருந்து தொடங்குகிறது. 2002-ம் ஆண்டு 25 நாடுகளில் புதிய தொழில் தொடங்குவதற்கான சூழல் குறித்து, உலக வங்கி குழுமத்தின் காலாண்டுப் பொருளாதார சஞ்சிகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த இந்த அறிக்கை, 2015-ம் ஆண்டு 189 நாடுகளில் வர்த்தகம் தொடங்குவதற்கான சுலப வர்த்தகச் சூழல் குறித்து வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை, தொழில் தொடங்குதல் (Starting a business), கட்டுமான அனுமதி பெறுதல் (Construction permits), மின்வசதி பெறுதல், சொத்துகளைப் பதிவு செய்தல், சுலபமாகத் தொழில் கடன் பெறுதல், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, வரிக் கணக்கீட்டுக்குச் செலவிடும் நேரம், லாபத்தில் எத்தனை சதவிகிதம் வரியாகச் செலுத்தப்படுகிறது என்கிற கணக்கு, எல்லை தாண்டிய வியாபாரம், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல், திவாலான நிலையிருந்து மீண்டு வருதல் போன்றவற்றையும், தொழிலாளர் நலச்சட்டங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு நாட்டில் சுலப வர்த்தக சூழல் குறியீட்டு எண்ணைக் கணக்கிடுகிறது.

இந்தக் குறியீட்டு எண், தொழிலாளர் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கருதும் பன்னாட்டு வர்த்தக யூனியன் கூட்டமைப்பு (ITUC), 2014-ம் ஆண்டு முதல் இந்த அறிக்கைக்கு எதிராக உலக உரிமைகள் குறியீட்டு எண் (Global Rights Index) என்ற தொழிலாளர் நலன் குறியீட்டு எண்ணை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

2. உலக வங்கிக் குழுமம் (World Bank Group) என்பது உலக வங்கி சார்ந்த ஐந்து நிறுவனங்களைக் கூட்டாகக் குறிப்பிடுகிறது. இந்த ஐந்து நிறுவனங்கள்...

1. International Bank for Reconstruction and Development (IBRD)

2.
International Development Agency (IDA)

3. International Finance Corporation (IFC)

4. Multi Investment Guarantee Agency (MIGA)

5. International Centre for Settlement and Investment Dispute (ICSID)