மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...?

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...?

டாக்டா் சங்கர சரவணன்

ந்நிய முதலீடு என்றாலே நம்மில் பலரும் முகம் சுளிப்பார்கள். நம் நாட்டை அடிமைப் படுத்தும் மறைமுக வழி என அனல் பறக்கப் பேசுவார்கள். உண்மையில், அந்நிய நேரடி முதலீடு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளைக் கவனியுங்கள்.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...?

1. Both Foreign Direct Investment (FDI) and Foreign Institutional Investor (FII) are related to investment in a country. Which one of the following statements best represents an important difference between the two?

(a)     FII helps bring better management skills and technology, while FDI only brings in capital

(b)     FII helps in increasing capital availability in general, while FDI only targets specific sectors

(c)     FDI flows only into the secondary market, while FII targets primary market

(d)     FII is considered to be more stable than FDI (IAS - 2011)

2. Which of the following would include Foreign Direct Investment in India?

(1). Subsidiaries of companies in India

(2). Majority foreign equity holding in Indian companies

(3). Companies exclusively financed by foreign companies

(4) Portfolio investment

Select the correct answer using the codes given below :

(a) 1, 2, 3 and 4

(b) 2 and 4 only

(c) 1 and 3 only

(d) 1, 2 and 3 only (IAS - 2012)


முதல் கேள்வியில், அந்நிய நேரடி முதலீட்டுக்கும் (Foreign Direct Investment), அந்நிய நிறுவன முதலீட்டுக்கும் (Foreign Institutional Investment) உள்ள முக்கிய வேறுபாடு கேட்கப் பட்டுள்ளது. இரண்டாவது கேள்வியில், சில முதலீடுகளைப் பட்டியலிட்டு, இவற்றுள் எவை அந்நிய நேரடி முதலீட்டில் அடங்கும் என்று கேட்கப்பட்டுள்ளது.

முதல் கேள்வியை ஆராயும்முன் இரண்டு வகை முதலீடுகள் குறித்தும் சிறிது தெரிந்துகொள்வோம்.  ஒவ்வொரு முறையும் அந்நிய நேரடி முதலீடு என்றும், அந்நிய நிறுவன முதலீடு என்றும், முழுமையாக எழுதினால் பாதிக் கட்டுரைக்கான இடத்தை இந்த வார்த்தைகளுக்கே முதலீடு செய்ய வேண்டும். எனவே, முன்னதை சுருக்கமாக எஃப்.டி.ஐ (FDI) என்றும், பின்னதை சுருக்கமாக எஃப்.ஐ.ஐ (FII) என்றும் எழுதுவோம்.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...?



எஃப்.டி.ஐ என்பது ஒரு நாட்டின் தொழில் அல்லது வணிகத் துறையில் அந்நியா் ஒருவரோ அல்லது அந்நிய நிறுவனம் ஒன்றோ நேரடியாக செய்யும் முதலீடாகும். அதாவது, எஃப்.டி.ஐ என்பது முதலீடு செய்யப்படும் நாட்டில் உள்ளதொரு நிறுவனத்தை வாங்குதல், கையகப்படுத்துதல், கட்டமைப்பு ஏற்படுத்துதல் போன்ற நிலைகளில் அமையலாம்.

பங்குச் சந்தையில் செய்யப்படும் முனைப்பற்ற முதலீடு எஃப்.டி.ஐ  ஆகாது. எஃப்.ஐ.ஐ-உடன் ஒப்பிடும்போது, எஃப்.டி.ஐ முதலீடு நிரந்தரத்தன்மை மிக்கது. மேலும், எஃப்.டி.ஐ முதலீட்டில் மூலதனப் பண வரவுடன் (Capital inflow), முதலீடு பெறும் நாட்டின் தொழில் வளம் பெருகவும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகள் (Infrastructure) ஏற்படவும், முன்னேறிய தொழில்நுட்பங்கள் (Advanced technologies) அறிமுகமாகவும் அதிக வாய்ப்புகள் உண்டு.

இனி எஃப்.ஐ.ஐ குறித்து பார்ப்போம். எஃப்.ஐ.ஐ என்பது வெளிநாட்டு நிறுவனமோ, தனி நபரோ இன்னொரு நாட்டின் பங்குச் சந்தையில் செய்யும் முதலீடு ஆகும். இந்த வகை பங்குச் சந்தை முதலீடுகள் தற்காலிகமானவை. பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கினால், அந்தப் பங்குகளில் முதலீடு செய்த வெளிநாட்டு நபா்கள் அல்லது நிறுவனங்கள் உடனடியாக தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்றுவிடக்கூடும்.

 எனவே, எஃப்.ஐ.ஐ-ன் தன்மையை விளக்கும்போது பொருளாதார வல்லுநா்கள், அதை ‘Highly Volatile’ என  ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அதாவது, அதிகம் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. சுருக்கமாக, எஃப்.டி.ஐ என்பது நிலையானது, எஃப்.ஐ.ஐ என்பது நிலையற்றது எனலாம்.

இனி, முதல் கேள்விக்கு வருவோம், (a), (b), (d) ஆகிய மூன்று கருத்துகளும் எஃப்.டி.ஐ, எஃப்.ஐ.ஐ-க்களைப் பொருத்தமட்டில் அப்படியே நேருக்குமாறாக தரப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொண்டால் (c) தான் சரியான விடையென்று தெளிவாக முடிவுக்கு வரமுடியும்.

அதென்ன பிரைமரி மார்க்கெட், செகண்டரி மார்க்கெட்? இணையத்தில் தேடியபோது, 60,000 பேருக்கும் மேற்பட்டோர்களால் படிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் விடை கிடைத்தது. எஃப்.டி.ஐ என்பது முதன்மைச் சந்தையில் செய்யப்படும் முதலீடு; எஃப்.ஐ.ஐ என்பது இரண்டாம் நிலைச் சந்தையில் செய்யப்படும் முதலீடு. யோகிதா கராச்சி என்ற சமூக விஞ்ஞானி, மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கொடுக்கப்பட்ட இந்த வரையறைதான் எஃப்.டி.ஐ, எஃப்.ஐ.ஐ-க்கான வேறுபாட்டை மிகச் சுருக்கமாகவும், கச்சித மாகவும் விளக்குவதாகக் குறிப்பிடுகிறார். மற்ற எல்லா வேறுபாடுகளும் இந்த அடிப்படையிலிருந்து எழுபவையே என்பது அவருடைய கருத்து.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...?

எஃப்.ஐ.ஐ ஒரு நாட்டில் நுழையவும், வெளியேறவும் அதிகமான கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம்; எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அதனால்தான் பொருளாதார வல்லுநா்கள் அதை ‘ஹாட் மணி’ என்கிறார்கள். இதனால், சிலர் இதை அனல் பறக்க எதிர்க்கிறார்கள்போல. 

பொருளாதார வல்லுநா் ஜேம்ஸ் டோபின், பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளைத் துறை முதலீடுகள் (Portfollio investment) என்று சொன்னார். அதாவது, வங்கித் துறை (Banking), காப்பீடு (Insurance), ஓய்வூதியம் (Pension) போன்றவற்றில் செய்யப்படும் முதலீடுகளே எஃப்.ஐ.ஐ-ஆகக் கருதப்படுவதால், எஃப்.ஐ.ஐ போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் (FII-ஐ Portfollio Investment) என்று அழைக்கிறார்கள்.

இந்த போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை செக்டார் ஸ்பெசிபிக்  இன்வெஸ்ட்மென்ட் என்ற வார்த்தையோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. செக்டார் ஸ்பெசிபிக்  இன்வெஸ்ட்மென்ட் என்பது பொதுவாக        எஃப்.டி.ஐ-யுடன் தொடா்புடையது. தமிழில் இதைத் துறைசார் சிறப்பு முதலீடுகள் எனலாம்.

என்னென்ன துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை எந்தெந்த அளவுக்கு  அனுமதிக்கலாம் என்பதற்கு அரசாங்கம் ஒரு வரம்பு வைத்துள்ளது. சில துறைகளில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது நாட்டு நலனுக்கு  உகந்ததல்ல என்று அரசாங்கம் கருதுவதால், சில துறைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு இருக்கிறது. காலப்போக்கில் இந்தக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் படிப்படியாகத் தளா்த்தி வருகிறது.

உதாரணமாக, ஐ.ஏ.எஸ்  தோ்வுக்குப்  படிக்கிற மாணவா்கள், டாடா மெக்ராஹில் (TATA McGrawHill) நிறுவனத்தின் புத்தக வெளியீடுகள் குறித்து நன்கு அறிந்திருப்பார்கள். புத்தக வெளியீட்டில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடு இருந்தவரையில் இந்த நிறுவனம், டாடா  நிறுவனத்தோடு இணைந்து தனது புத்தகங்களை வெளியிட்டுவந்தது.

சமீபத்திய ஆண்டுகளில் புத்தக வெளியீட்டில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப் பட்டபிறகு, இந்த நிறுவனம் மெக்ராஹில் எஜுகேஷன் (McGrawHill Education) என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டு வருவதை, துறை சார்ந்த அந்நிய நேரடி முதலீட்டில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருவதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

சரி, இரண்டாவது கேள்விக்கு விடை என்ன? (a), (b) இரண்டும் இல்லையென்று சரியாக ஊகித்திருப்பீா்கள், (c)யா? (d)யா? என்று குழப்பம் இருக்கிறதா? இன்னும் கொஞ்சம் யோசியுங்கள், அடுத்த வாரம் விளக்குவோம்.

(வெற்றி பெறுவோம்)