மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்!

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்!

டாக்டா் சங்கர சரவணன்

.ஏ.எஸ் தோ்வில் நம் நாட்டின்  பொருளாதாரம் தொடர்பான கேள்விகளில் முக்கியமாக இடம்பெறுவது, நமது பன்னாட்டுப் பொருளாதார ஒப்பந்தங்கள் பற்றிய கேள்வி களாகும்.  

பின்வரும் கேள்வி, 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் முதற்கட்டத் தோ்வில் கேட்கப்பட்டது.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்!

1. ‘Broad-based Trade and Investment Agreement’  (BTIA) is sometimes seen in the news in the context of negotiations held between India and

(a) European Union

(b) Gulf Cooperation Council

(c) Organization for Economic Cooperation and Development

(d) Shanghai Cooperation Organization


இந்தக் கேள்விக்குச் சரியான விடை (a) European Union என்பதாகும்.

சமீபத்திய பொருளாதாரச் செய்திகளைக் கவனமுடன் படித்து வருபவா்கள், இந்த அக்டோபா் மாதம் முதல் வாரத்தில் புது டெல்லியில் நடந்த 14-வது இந்திய – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டைப் பற்றிய செய்தியைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள். 

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் டொனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் ஜெ.சி. ஜங்கா் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 53 கருத்துகள்கொண்ட கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, இந்திய-ஐரோப்பிய உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது. 

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்!அந்தக் கூட்டறிக்கையில் இடம்பெற்ற 53 கருத்துகளில் 23 கருத்துகள், இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பானதாகும். அதில், இரண்டாவது முக்கியக் கருத்தாக (32-வது கருத்து), இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கிடையேயான பரந்துப்பட்ட வா்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (India-EU Broad based Trade and Investment Agreement - BTIA) பற்றியதாகும். 

இந்திய-ஐரோப்பிய யூனியன் செயல்திட்டம் 2020 (India-EU Agenda for Action -2020)-ஐ நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவா்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இந்தச் செயல்திட்டம், கடந்த ஆண்டு (2016) மார்ச் மாதத்தில், ஐரோப்பிய யூனியனின் ஒரு நாடான பெல்ஜியத்தின் தலைநகர் ப்ருசெல்ஸ் (Brussels) நகரில் நடைபெற்ற 13-வது ஐரோப்பிய யூனியன் – இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்டதாகும்.

இந்தச் செயல்திட்டம், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையேயான பல்வேறு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி விரிவாகப் பேசுகிறது. வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, மனித உரிமைகள், வர்த்தகம், முதலீடு, பருவநிலை மாற்றம், எரிசக்தி உற்பத்தி, நகர மேம்பாடு, சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், கல்வி, போக்குவரத்து, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவதற்குரிய வழிவகைகள் பற்றிக் கோடிட்டுக் காட்டுகிறது. 

இந்தச் செயல்திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல்வேறு உறவுகளில் வா்த்தக மற்றும் முதலீடு குறித்த உறவுகள் மிக முக்கியமானவை. ஏனெனில், இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக (Single Largest Trade Partner) ஐரோப்பிய யூனியன் உள்ளது. ஆனால், இந்தியா, ஐரோப்பிய யூனியனின் வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்பதாவது இடத்திலேயே (India is the 9th largest trade partner of EU) உள்ளது. இந்த நிலையிலிருந்து, முன்னேற்றம் காண வேண்டியது மிக அவசியமாகும். அதற்கு இலக்காக இந்தியா வைத்துள்ள ஒப்பந்தம்தான் பரந்துபட்ட வா்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (Broad based Trade and Investment Agreement – BTIA).

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் முக்கியத் தடையாக இருப்பது, தரவுப் பாதுகாப்பு தரநிலையை (Data Secure Status) ஐரோப்பிய யூனியன்  இன்னும் இந்தியாவுக்குத் தராமல் இருப்பதே எனப் பொருளாதார வல்லுநா்கள் கூறுகிறார்கள்.   

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்!

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் வழி செயல்படுத்தப்படும் சேவைகள் (Information Technology Enabled Services - ITES) ஆகியவை சார்ந்த துறைகளில் ஐரோப்பிய யூனியனோடு, இந்திய நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அந்நிய நேரடி முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டு வரவும், தரநிலை குறித்த ஒப்புதல் அவசியம். எனவேதான்,  அது குறித்த பேச்சுவார்த்தைகளில் இந்தியா தொடர்ந்து ஆா்வம் காட்டி வருகிறது.

ஐரோப்பிய யூனியனோடு இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவரும் ‘BTIA’ ஒப்பந்தம் போல, பிற வெளிநாடுகளோடும் இந்தியா மேற்கொள்ள உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அறிய தோ்வர்களும், முதலீட்டாளர்களும் ஆா்வமுடன் இருக்கக்கூடும்.

தற்போது, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், இதற்குமுன், இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சராக இருந்தபோது, ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து பட்டியலிட்டு அளித்தப் பதிலை Press Information Bureau மார்ச் 29 அன்று வெளியிட்டது. ‘BTIA’ ஒப்பந்தம் உள்பட பத்து ஒப்பந்தங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. (பார்க்க, இடதுபக்கத்திலுள்ள  பெட்டிச் செய்தி) ஆா்வமுள்ள தோ்வா்களும், முதலீட்டாளா்களும் அந்த ஒப்பந்தங்கள் குறித்துத் தேடிப் படிக்கலாம்.

(தேர்ச்சி பெறுவோம்)

இந்தியா பிற வெளிநாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்திவரும் ஒப்பந்தங்களின் பட்டியல் 

(தொழில் மற்றும் வர்த்தக துறை மார்ச் 29, 2017 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டது).

(i) India – EU: Broad based Trade and Investment Agreement (BTIA)

(ii) India – Sri Lanka: Economic and Technical Cooperation Agreements (ETCA)

(iii) India – Thailand: Comprehensive Economic Cooperation Agreement (CECA)

(iv) India – Mauritius: Comprehensive Economic Cooperation and Partnership Agreement (CECPA)

(v) India-EFTA: Trade and Economic Partnership Agreement (TEPA)

(vi) India - New Zealand: Comprehensive Economic Cooperation  Agreement (CECA)

(vii) India – Australia: Comprehensive Economic Cooperation  Agreement (CECA)

(viii) BIMSTEC: Comprehensive Economic Cooperation  Agreement (CECA)

(ix) India – Canada: Free Trade Agreement (FTA)

(x) Regional Comprehensive Economic Partnership (RCEP) Agreement