
டாக்டா் சங்கர சரவணன்
ஐ.ஏ.எஸ் தேர்வில் 2013-ல் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பார்ப்போம்.
1. ‘Economic Justice’ as one of the objective of the Indian Constitution has been provided in
(a) the Preamble and the Fundamental Rights
(b) the Preamble and the Directive Principles of State Policy
(c) the Fundamental Rights and the Directive Principles of State Policy
(d) None of the above
Exp (b): The Preamble explicity provides for Economic Justice as an objective of the Indian Constitution. The part on Directive Principles of State Policy on the other hand contains several articles, which provide for economic justice. e.g. Article 38(1) says, “The state shall strive to promote the welfare of the people by securing and protecting as effectively as it may a social order, in which justice, social, economic and political shall inform all the institutions of the national life.” The part on Fundamental Rights on the other hand is concerned with individual rights against the state and does not contain provisions for economic justice directly. (IAS: 2013)

கடந்த வாரம் திரள்நிதி, திரள்நிதியிலிருந்து ஒதுக்கீடு பெறுவதற்கான மானியக் கோரிக்கைகள், திரள்நிதியில் சாட்டப்பட்ட செலவினங்கள் குறித்துக் கண்டோம்.
பட்ஜெட்டில் ஒவ்வொரு பகுதியையும் ஆராய்வதற்கும், விவாதிப்பதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை விரிவாக எடுத்துக் கூறுவதற்கும், அந்தக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லதொரு கருவியாக இருக்கும் வெட்டு தீர்மானங்களின் வகைகள் குறித்தும் கடந்த இதழில் விளக்கியிருந்தோம்.
அரசாங்க நிதியை பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான பணி, மானியக் கோரிக்கைகள் நிறைவேறுவதுடன் முடிந்துவிடுவதில்லை. அதற்கு மேலும் சில சட்டபூர்வமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்தபின் பட்ஜெட் சார்ந்த இரண்டு சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும், அவை, நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (Appropriation act) மற்றும் நிதிச் சட்டம் (Finance Act).
ஒவ்வொரு மானியக் கோரிக்கையின் கீழும் கோரப்படும் நிதித் தொகையை இந்திய திரட்டு நிதியிலிருந்து பெறுவதற்கு வசதியாக நிதி ஒதுக்கீட்டுச் சட்டமும், ஒவ்வோர் ஆண்டு பட்ஜெட்டில் விதிக்கப்படும் வரிகளை வசூலிப்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கி நிதிச் சட்டமும் இயற்றப்படுகின்றன.
சட்ட அனுமதி பெற்ற இந்த நிதி ஒதுக்கீட்டைத் தவிர, வேறு வகைகளில் திரள்நிதியிலிருந்து நிதி பெறுவதை இந்திய அரசமைப்புத் தடை செய்துள்ளது.

எதிர்பாராத காரணங்களுக்காக ஒரு துறையில் ஏற்படும் திடீர் செலவுகளைச் சமாளிக்க சில நேரங்களில் நிதி தேவைப்படலாம். அத்தகைய நேரங்களில் நாடாளுமன்ற பட்ஜெட்டுக்காகக் காத்துக்கொண்டிருக்க முடியாது. எதிர்பாராத காரணங்களையொட்டி ஏற்படும் திடீர் செலவினம் பொதுநலன் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில், அதைப் பெறுவதற்கென்று இந்தியக் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அவசர கால நிதி (Contingency Fund) என்னும் ஒரு வகை நிதிக்கு இந்திய அரசமைப்பின் உறுப்பு 267-ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து முன்பணம் வழங்க குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிதித் தொகை எவ்வளவு ரூபாய் என்று வாசகர்களுக்குத் தெரியுமா? தெரிந்து எழுதினால் பரிசு உண்டு.
ஆனால், அவசர கால நிதியிலிருந்து பெறப்படுகிற முன்பணம் தற்காலிகமானதே. அந்தச் செலவினத்துக்குப்பின் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று முன்பணத்தை நேர்செய்ய வேண்டும்.
பொது நிதி மேலாண்மையில் நாடாளுமன்றத்தில் இரண்டு குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை முறையே, வரவு செலவு திட்ட மதிப்புக் குழு (Estimates Committee) மற்றும் பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) ஆகும். இந்தக் குழுக்கள் தவிர, இந்திய அரசாங்கத்தின் பொது நிதி மேலாண்மை தணிக்கைத் தலைவர் (Comptroller and Auditor General of India) பங்கு மிக முக்கியமானதாகும்.
நாடாளுமன்ற மக்களவையும் பெரும்பான்மை உறுப்பினர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி செலுத்திவருகிற அரசியல் நிர்வாகத் தலைமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்துவருவதை உறுதிப்படுத்தவும் ஆளுங்கட்சி அல்லாத பிற கட்சி உறுப்பினர்கள் பொது நலம் சார்ந்து நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தரவும் இந்திய அரசமைப்பு, போதுமான அளவில் வழிவகை செய்துள்ளது.
(தேர்ச்சி பெறுவோம்)
ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் பயன்படும் புத்தகங்கள்!
ஐ.ஏ.எஸ் தேர்வைத் தமிழில் எழுதும் மாணவர்கள் பலர் அந்தத் தேர்வுக்குப் பயன்படும் தமிழ் நூல்கள் பற்றித் தெரிவிக்குமாறு தொடர்ந்து கேட்டுவருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.
1. போட்டித் தேர்வில் பொருளாதாரம் (ஆசிரியர்: டாக்டர் சங்கர சரவணன், வெளியீடு: விகடன் பிரசுரம். நாணயம் விகடனில் தொடராக வந்து பின்னர் தொகுத்து வெளியிடப்பட்ட நூல்.)
2. இந்திய அரசியலமைப்புத் திட்டம் (Indian Constitution) ஆசிரியர்: எம்.வி.பைலீ; தமிழாக்கம் தி.வெ.குப்புசாமி மற்றும் எஸ்.சுப்பிரமணியன் (தமிழ்நாடு அரசாங்கத்தின் தமிழ் வெளியீட்டுக் கழகம் 1967-ல் வெளியிட்ட இந்த நூல் பொது நிதி மேலாண்மை சார்ந்த பல கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும். இந்த நூல் தமிழகத்தின் முக்கிய நூலகங்களில் கிடைக்கலாம். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சமீபத்தில் இந்த நூலின் ஆவணப் பதிப்பை வெளியிட்டுள்ளது)
3. இந்தியப் பொருளாதாரம் முக்கிய கருத்துகள் – எளிய தமிழில் இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான சங்கர் கணேஷ் கருப்பையா எழுதிய இந்த நூல், ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழில் எழுதுபவர்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடியது. வெளியீடு: கவின் முகில் பதிப்பகம்.