தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே! - யாமினி தோதே

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே! - யாமினி தோதே
பிரீமியம் ஸ்டோரி
News
ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே! - யாமினி தோதே

அருமை

‘`ஒரு நுகர்வோராகச் சென்று, நான் தேடியவை கிடைக்காததால், நாமே அவற்றைத் தந்தால் என்ன என்று யோசித்து தொழில்முனைவோர் ஆன கதை என்னுடையது’’ என்று சுவாரஸ்யமாகத் தொடங்குகிறார் யாமினி தோதே.

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே! - யாமினி தோதே

‘`மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி என் சொந்த ஊர். கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறேன். எங்கள் மகளின் எதிர்காலத்துக்கான சேமிப்புக்காக, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள `சுகன்ய சம்ரித்தி யோஜனா' என்ற சேமிப்புத் திட்டம் பற்றி அறிந்துகொள்ள கூகுள் மற்றும் அஞ்சல் துறையின் வலைதளத்தில் தேடினோம். முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. இதைப்போல ஆயிரக்கணக்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி யிருப்பதும், மக்களுக்கு இப்படியெல்லாம் திட்டங்கள் இருப்பதே தெரியாமலிருப்பதும் புரிந்தது.

2016-ம் ஆண்டு மூன்று உதவியாளர்களைப் பணிக்கு அமர்த்தி, நானும் என் கணவரும் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை அலசி ஆராய்ந்து, govinfo.me என்ற இணையதளத்தில் தொகுக்க ஆரம்பித்தோம். இந்த மூன்றாண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களை அவ்வாறு பதிந்துள்ளோம். திட்டம் பற்றிய சுருக்கமான அறிமுகம், பயனாளிக்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள், விண்ணப்பப் படிவம், முக்கிய விவரங்கள் என இந்த ஐந்து அம்சங்களின் அடிப்படையில் அந்த விவரங்களைத் தொகுத் தோம். இப்போது, அரசின் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நலத் திட்டங்கள் மற்றும் முக்கிய அறிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தகவல் களஞ்சியமாகவே மாறிவிட்டது எங்கள் இணையதளம். ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதைப் பார்வையிடுகின்றனர்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் யாமினி.

நலம் தரும் தளம்!

 - ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்