
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
ருடால்ஃப் எரிச் ராஸ்பே என்பவர் 1785-ம் ஆண்டில் எழுதிய புத்தகம் ‘தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பாரென் முன்சாவ்சென்’ (The Adventures of Baron Munchausen). கற்பனைக்கு எட்டாத பல கதைகளை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ருடால்ஃப்.
உதாரணமாக, கதையின் நாயகன் கையில் இருந்த சிறிய கோடரியை வானத்தை நோக்கி தூக்கி எறிய, அது நிலாவில் போய் விழுந்து விட்டதாகவும், அதை எப்படி எடுத்து வர முடியும் என்று யோசித்தபோது, அதிவேகமாக வளரும் மரம் ஒன்றை நட்டு, அது வளர்ந்தவுடன் அதில் ஏறிச்சென்று கோடரியை எடுத்து வந்ததாகவும் எழுதியிருக்கிறார்.

இன்னொரு கதையில் நாயகன் குதிரையில் போய்க்கொண்டிருக்கும்போது குதிரை புதைகுழியில் காலைவைத்து சிக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக புதைய ஆரம்பித்த தாகவும், அப்படி புதையும்போது எப்படி தப்பிப்பது என்று யோசிக்க, நாயகன் தனது நீண்ட முடியை (கூந்தல் போல் ஆண்கள் முடி வளர்ப்பது அந்தக் காலத்தைய ஃபேஷன்) எடுத்து மரத்தின் மீது வீசி, அதைப் பிடித்து ஏறி, புதைகுழியில் சிக்காமல் மீண்டு வந்ததாகவும் எழுதியிருக்கிறார்.
இந்தக் கதைகளைப் படித்தால் ‘லாஜிக்’ நிறையவே இடிக்கும். ஆனால், கதாநாயகன் தன் தலைமுடியைப் பயன்படுத்தி, புதைகுழியில் சிக்காமல் தப்பித்து வருவதுபோல, நம்முடைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து வெளியே வர, நாம் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். இதற்கு ‘உத்வேகம்’ என்பது மிக மிக அவசியம்’’ என்கிறார், நாம் இந்த வாரம் பார்க்க இருக்கும் ‘கெட் இட் டன் (Get it Done)’ புத்தகத்தின் ஆசிரியர் ஐலெட் ஃபிஷ்பேக்.
எதற்கு உத்வேகம்?
“படிப்பு, வேலை, குடியுரிமை பெறுதல், திருமணம், குழந்தை பெறுதல்/வளர்த்தல் என்பது போன்ற வாழ்வின் பெரிய அம்சங் களானாலும் சரி, நாயை வெளியே அழைத்துச் செல்லுதல், சமயலறையை சுத்தம் செய்தல் போன்ற சிறிய அம்சங்களானாலும் சரி, எதில் நாம் முழுமனதுடன் ஈடுபட வேண்டும் என்றாலும் நமக்குள் ஓர் உத்வேகம் தேவைப்படவே செய்கிறது. ஆனால், எப்படி நம்மை நாமே உத்வேகப்படுத்திக்கொள்வது? நம்முடைய சூழலை மாற்றினால் நம்மால் தேவையான உத்வேகத்தைப் பெற முடியும் என்பதே இந்தக் கேள்விக்கான பதில். இதுதான் நடத்தை சார்ந்த அறிவியலின் (Behavioural science) அடிப்படை விதி.
உதாரணமாக, நீங்கள் சத்துள்ள உணவுப் பொருள்களை மட்டுமே சாப்பிட ேவண்டும் என நினைக்கிறீர்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டில் உள்ள குளிர்பதனப்பெட்டியில் பச்சைக் காய்கறிகளையும் சத்தான பழங்களையும் மட்டுமே எப்போதும் வைத்திருக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் சத்தான உணவை சாப்பிடமுடியும்.
சரி, வெளியே சாப்பிட்டால்..? உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் (வீடு மற்றும் அலுவலகம்) ‘நான் இனி சத்தான உணவுப் பொருள்களையே சாப்பிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்’ என்று சொல்லி வைத்துவிட வேண்டும். அப்படிச் சொன்ன பின், க்ரீம் அதிகம் இருக்கிற உணவுப் பொருளை நீங்கள் சாப்பிட முயற்சி செய்யும்போது அவர்கள் உங்களை எச்சரிப்பார்கள். எனவே, க்ரீம் உணவுகள் மிகவும் ருசியானது என்கிற கருத்தை உங்கள் மனதில் இருந்து அழித்து, அது உங்கள் உடலுக்கு மிகவும் கெடுதியானது என்கிற மனநிலைக்கு நீங்கள் மாற வேண்டும். இப்படிப்பட்ட மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் அதன்பின் நீங்கள் சத்து மிகுந்த உணவையே சாப்பிடுவீர்கள் இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியை.

இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்...
உத்வேகத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய ஆசிரியர், இந்த உத்வேகத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம் என்பதையும் சொல்கிறார். ‘‘காதலிப்பதானாலும் சரி, உடற்பயிற்சிக்காகத் தலைகீழாக நிற்பதற்கான முயற்சியானாலும் சரி, சிறந்த விற்பன்னராக நீங்கள் மாற முயற்சி செய்தாலும் சரி, உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், முதலில் உங்கள் இலக்கில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். சரியான இலக்கானது செல்லும் திசையைத் தெளிவாகக் காட்டக்கூடியதாக இருக்கும். ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதாக நினைத்துக்கொண்டு ஒரே வட்டப் பாதைக்குள் நீங்கள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கக் கூடாது.
முதலாவதாக... இலக்கு என்பது ஒரு சாதாரண வேலையைப் போன்றதாக இருக்கக்கூடாது. பெரும்சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அத்தகைய சக்தி வாய்ந்த இலக்கை அடைய நீங்கள் விலை மதிப்பற்ற உழைப்பைத் தரவேண்டியிருக்கும். அதற்கு பெரும்உத்வேகமும் தேவைப்படும். நம் இலக்கு சாதாரண வேலை போன்றதாக இருக்கும்பட்சத்தில், அதற்காக பெரிய உழைப்பைத் தர நமக்கு மனம் வராது. பெரிய அளவில் உத்வேகமும் தேவைப்படாது.
இரண்டாவதாக, நிர்ணயித்த இலக்கை செய்யத் தேவையான உத்வேகத்தைப் பெற்று அதை நாளடைவில் தக்கவைத்துக் கொள்ளவும் வேண்டும். ஏனென்றால், இலக்கு ஒன்றை நிர்ணயித்து அதை நோக்கி பயணம் செய்யும்போது இடையே நாம் பல்வேறு விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கும். அப்போது அந்தப் பல்வேறு விஷயங்களில் மனம் ஒன்றி இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது. இதனாலேயே நாம் பெற்ற உத்வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதையும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
உத்வேகத்தை தக்கவைத்துக்கொள்ள இலக்கை நோக்கிய பயணம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணரும் வண்ணம் நம்முடைய பயணம் இருந்தால் மட்டுமே நம்மால் நம்முடைய உத்வேகத் தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
மூன்றாவதாக, ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தை ஒரே நேரத்தில் செய்யும் கலை யையும் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். பல்வேறு இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கும்போது (சில சமயம் ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமானதாக இருக்கும்) ஒவ்வோர் இலக்குக்கும் தேவையான அளவு கவனம், நேரம் மற்றும் முன்னுரிமை வழங்குதல் போன்றவற்றை சரியான அளவில் எடை போட்டு நிர்ணயித்து செயல்படவும் நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
இலக்கை நீட்டித்துக்கொண்டே இருங்கள்!
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துவிடு கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு..? நீங்கள் அடைந்த இலக்கின் அடுத்த முனை என்று கண்டுபிடித்து, அதை நோக்கி சென்றுகொண்டே இருக்க வேண்டும். நாம்தான் நிர்ண யித்த இலக்கை அடைந்து விட்டோமே, திரும்பவும் எதற்கு இலக்கை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைத்து ஒரே இடத்தில் நின்றுவிடக் கூடாது. அப்படி நினைத்தால், நாம் நிச்சயம் பின் தங்கிவிடுவோம்” என்று எச்சரிக்கிறார் இந்தப் புத்தகத் தின் ஆசிரியர்.
சுற்றி இருப்பவர்களின் ஆதரவைப் பெறுங்கள்...
“இறுதியாக, நீங்கள் உத்வேகத்தைப் பெற விரும்பும் விஷயங்களுக் கெல்லாம் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் முழு ஆதரவைப் பெறுவது எப்படி என்ற கலையையும் நீங்கள் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு உங்களைச் சுற்றி இருப்பவர்கள் குறித்து உங்களுக்கு எந்தளவுக்கு தெளிவாகத் தெரியும், அவர்கள் குறித்து எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
மேலும், உங்களுடைய இலக்குகளை அவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துகொண் டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய இலக்குகள் குறித்து உங்களுக்கு எந்த அளவுக்கு புரிந்துகொள்ளல் இருக்கிறது என்பதும் இந்தவித ஆதரவைப் பெறு வதில் பெரும் பங்கு வகிப்ப தாக இருக்கிறது. ஏனென்றால், உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் இணைந்துகொண்டு செயல் படும்போது உங்களால் சுலபமாக இலக்கை அடைய முடியும்.
இந்த விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண் டால் மட்டும் போதாது. உங்களுடைய செயல்பாட்டில் இதில் எது குறைவாக இருக்கிறது அல்லது இல்லாமல் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்களைச் சுற்றி இருப்பவர்களின் ஆதரவு உங்களுக்கு ஏற்கெனவே நிறைய இருக்கிறது எனில், மீண்டும் அதற்கான முயற்சியில் இறங்காமல், வேறு ஏதாவது ஒரு வேலையை உருப்படியாகச் செய்யலாமே!’’ என்று சொல்லி உத்வேகப்படுத்துகிறார் ஆசிரியர்.
நான்கு பெரும் பிரிவுகளாக...
இந்தப் புத்தகம் நான்கு பெரும் பிரிவுகளாக எழுதப்பட்டிருக்கிறது. முதலாவது பிரிவில், உங்களைக் கவர்ந்து இழுக்கிற பவர்ஃபுல்லான இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி என்பது குறித்து விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவு, இலக்கை நோக்கிய உங்களுடைய பயணத்தின் சுறுசுறுப்பும் வேகமும் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதை விளக்கமாகக் கூறுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதில் எதற்கு, எப்போது, எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது என்பதைப் பற்றி மூன்றாம் பிரிவில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. நான்காவது பெரும் பிரிவில், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவியாக இருப்பது எப்படி, அவர்களைப் பயன் படுத்தி உங்களுடைய இலக்குகளை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக அரங்கேற்றுவது எப்படி என்பது குறித்து தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டி ருக்கிறது.
சரியான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி சீராகப் பயணிப் பதற்கான உத்வேகத் தைப் பெற்று வெற்றி பெறுவது எப்படி என்பதைத் தெளிவாக விளக்கும் இந்தப் புத்தகத்தை வாழ்க்கை யில் முன்னேற நினைக் கும் அனைவரும் படித்து பயன் பெறலாம்.