பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஜெயிப்பதற்குத் தேவையான கான்ஃபிடன்ஸ் போதிய அளவு உங்களிடம் இருக்கிறதா?

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

நம்பிக்கையுடன் (confidence) வாழ்வது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப் படைத் தேவையாக இருக்கிறது. நம்பிக்கை என்பதே இல்லாத ஒன்றை நம்புவதுதான். எப்படி என்கிறீர்களா?

புத்தகத்தின் பெயர்: How to Be 
                 Confident
ஆசிரியர்: James Smith
பதிப்பகம்:‎ Harper Collins
புத்தகத்தின் பெயர்: How to Be Confident ஆசிரியர்: James Smith பதிப்பகம்:‎ Harper Collins

இந்த உலகில் எந்த ஒரு நிகழ்வுமே அது நிகழாத வரை நடத்திவிட முடியாத ஒன்றாகத் தான் பார்க்கப்படுகிறது. இதுவரை நிகழாத ஒன்றை நிகழ்த்த நம் அனைவருக்கும் நம்பிக்கை என்பது அவசியமாகத் தேவைப்படுகிறது. ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறீர்கள். இந்தப் பதவிக்கும் சம்பளத்துக்கும் நான் தகுதியானவன் என்று நினைத்து வாதாடி, பதவியைப் பெறுகிறீர்கள். பதவியேற்ற பின்னால் உங்களால் அந்த நிறுவனம் எதிர் பார்க்கும் அளவுக்கு செயல்பட முடியாமல் போகலாம். அதனால் வேலையை இழக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம். இதற்கு பயந்து, அந்த வேலையைப் பெறுவதற்கான தகுதி உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்வதுதான் தவறு. உங்களுக்கு தகுதி இருக்கிறது என்று நம்புவதில் தவறு என்பது எள்ளளவுமில்லை. இந்த நம்பிக்கைதான் கதவுகளைத் திறக்கும்; புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும், ரிஸ்க் எடுக்க வைக்கும், உங்களின் மீது நம்பிக்கை வைக்கவும், உங்களுக்குப் பின் ஒரு சப்போர்ட்டாக நின்று வெற்றியைப் பெற வழிவகைகளைச் செய்யும்.

கான்ஃபிடன்ஸ் என்பது...

நடைப்பயணமாகச் செல்லுதல் (walking) எனக்குப் பிடிக்கும் என்றும் சொல்லும் நபர், எவ்வளவு தூரம் என்றாலும் நடந்துசென்று கடந்துவிடுவார். மாறாக, இந்த இடத்துக்கு போக வேண்டும் என்பதற்காக நடப்பவர், அந்த இடம்வந்தவுடன் தளர்ந்துபோய் விடுவார். இதற்கும் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா? நம்பிக்கை என்பது சென்று சேர வேண்டிய இடமல்ல. அது ஒரு வாழ்நாள் பயணம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் நம்பிக்கை என்பதில் ஏற்படுத்திக் கொள்ளும் சிறிய அளவிலான இந்த மாற்றம் நாள்கள் செல்லச் செல்ல நீங்கள் கடந்து செல்கிற இடங்கள் எல்லாம் மிகவும் செழிப் பானதாக இருக்க வைக்கும்.

உங்களுடைய கேரியர் (பணி சார்ந்த விஷயங்கள்), உங்களுடைய உறவுகள் (சுற்றம் நட்பு போன்றவை) மற்றும் உங்களுடைய வாழ்க்கை என்ற மூன்றிலும் உங்களிடம் இருக்கும் நம்பிக்கை என்பது எண்ணிலடங்கா நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும். இதை உணர ஒரு சுலபமான வழி இருக்கிறது. நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை எண்ணிப் பார்ப்பதை விட்டு விட்டு, உங்களிடத்தே நம்பிக்கை என்பது இல்லாதுபோனால் நீங்கள் என்னென்ன சிரமங்களை அனுபவிப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மிகவும் சுலபமாக உங்களுக்கு நம்பிக்கையின் அருமை புரிந்துவிடும்.

நம்பிக்கையைப் பொறுத்தவரை, இன்னுமொரு முக்கியமான விஷயம், மற்றவர்கள் நம்மிடத்தில் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் அளவுக்கு நாம் நடிக்கக்கூட செய்துவிடலாம். ஆனால், நம்மை நாமே நம்பிக்கை இருப்பதைப் போல் ஏமாற்றிக்கொள்ள முடியாது என்பதுதான்.

ஜெயிப்பதற்குத் தேவையான 
கான்ஃபிடன்ஸ் போதிய அளவு 
உங்களிடம் இருக்கிறதா?

எது கான்ஃபிடன்ஸ்?

நம்பிக்கை என்பது மகிழ்ச்சியா அல்லது வருத்தமா அல்லது எதற்கும் தயாராக இருக்கும் மனநிலையா அல்லது இதுதான் என்று நிர்ணயித்துக்கொண்டிருக்கும் மனநிலையா, அது ஒருவரை அதிக மோட்டிவேஷன் கொண்டவராக இருக்கச் செய்யுமா அல்லது பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் வாழச் செய்யுமா?

இவற்றுக்கெல்லாம் விடையைத் தேடும்முன் நாம் நம்மைச் சுற்றி இருக்கும் நபர்களிடையே இருக்கும் நம்பிக்கை என்ற பதத்தின் அர்த்தத்தைக் கண்டறிய முயல்வோம். ஏதோ ஒரு ஊருக்கு காரோட்டிக்கொண்டு போகிறோம். ‘இந்த ரூட்டில் போனால் சீக்கிரமாகப் போய்ச் சேர முடியும். அதற்கு நான் கியாரன்டி’ என்று சொல்வதெல்லாம் கான்ஃபிடன்ஸா? இவை எல்லாம் அறிவாற்றல் சார்ந்த (epistemic confidence) நம்பிக்கை எனப்படும். வாகன ஓட்டிகள் தங்களுடைய ஓட்டும் திறனை மனதில் கொண்டு வண்டியை ஓட்டும்போது எடுக்கும் நம்பிக்கையான முடிவுகள் இந்த வகையைச் சார்ந்தது.

இம்ஃபோஸ்ட்டர் சின்ட்ரோம்...’

வாகனத்தை சிறப்பாக ஓட்டுவேன் என்ற நம்பிக்கையுடன் சாலையில் சிறப்பாக ஓட்டும் அதே நபருக்கு அலுவலகத்தில் ஒரு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் இதற்கு நான் தகுதியானவன்தானா, அதை என்னால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகத்துடனான கேள்வி மனதின் ஒரு மூலையில் உதிக்கவே செய்யும். இதை ஆங்கிலத்தில் `இம்ப்போஸ்ட்டர் சின்ட்ரோம்’ என்பார்கள்.

ஓர் அலுவலக மீட்டிங்கில் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் குறித்து அந்த மீட்டிங்கில் பங்கேற்பவர்கள் அனைவரையும் விட உங்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருந்துமே அது குறித்து பெரியதாக நீங்கள் காட்டிக்கொள்ளாமல் நமக்கேன் வம்பு என்று இருந்தீர்கள் எனில், அறிவாற்றல் சார்ந்த நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். எல்லாரையும்விட அதிகமாகத் தெரிந்திருந்தும் நான் ஏன் பேசவிலலை என்ற கேள்வியை நீங்கள் உங்களிடம் கேட்டேயாக வேண்டும்.

புதியதாக ஒரு நபரை சந்திக்கும்போது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படிப் பேசுகிறீர்கள், என்ன பேசுகிறீர்கள் என்பதையெல்லாம் உள்ளடக்கியதுதான் சமூகம் சம்பந்தமான நடவடிக்கையில் உள்ள நம்பிக்கை (social confidence) என்பதாகும். இந்தவித நம்பிக்கையைக் கொண்டிருக்க தைரியம் வேண்டும். சொல்லப்போனால், கொஞ்சம் பாசாங்கு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற சோசியல் செட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட பலருக் கும் தைரியம் என்பது அதிக அளவில் தேவைப்படும். ஏனென்றால், இது போன்ற சூழ்நிலைகளில் நாம் எதேனும் தவறு செய்துவிடுவோமோ என்ற பயம் நம்மில் பலருக்கும் அதிக அளவில் இருக்கவே செய்யும்.

ஒரு கமர்ஷியல் ஜிம்முக்கு போய் உறுப்பினராகி உடற் பயிற்சி செய்ய நினைக்கும் போது கூட இது உருவாகலாம். ஏனென்றால், பொதுவாக மனிதன் என்பவன் அவனை உலகம் நெகட்டிவ்வாகப் பார்த்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க முயல்கிறான்.

நேரடி மனிதத் தொடர்பு களை விடுங்கள். சோஷியல் மீடியாவில்கூட நம்மை யாரும் நெகட்டிவ்வாகப் பார்த்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க முயல்கிறோம். எதையாவது சொல்லி நம்மை மற்றவர்கள் விமர்சிப்பதற்கு ஆளாகிவிடாமல் அமைதி யாக இருந்துவிடுவோம் என்று நினைப்பதும் நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாத தால்தான்.

சுயநம்பிக்கை என்பது...

நம்மிடம் ஒப்படைக்கப் பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கான தகுதியும் திறமையும் நம்மிடம் முழுமையாக இருக்கிறது என்று நம்புவது சுயநம்பிக்கை (Self confidence) ஆகும். இந்த வகை நம்பிக்கை என்பது ஒருவருக்குக் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம். அதிலும் விளையாட்டு வீரர் களுக்கு இது மிகவும் அவசிய மான ஒன்றாக இருக்கிறது.

முகமது அலி ஒரு குத்துச் சண்டைக்குத் தயாரானாலும் சரி, பணிக்கு சேருவதற்கான நேர்காணலுக்குச் செல்லும் ஒரு நபரானாலும் சரி, அந்த விஷயத்தில் என்ன மாதிரியான விளைவு (result) இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதை நடத்திக்காட்டுவார். அது தான், அவரிடம் இருக்கும் சுயநம்பிக்கை.

உள்ளுணர்வு தரும் நம்பிக்கை...

உள்ளுணர்வு குறித்த நம்பிக்கை என்பது மற்றொரு வகை. முடிவுகளை எடுக்கும் போது பலதடவை உங்களுடைய உள்ளுணர்வு ஒன்றைச் சொல்லும். அதை யொட்டி தைரியமாக நீங்கள் முடிவெடுப்பீர்கள். அந்தக் காரியத்தில் வெற்றி பெற்றால், அது உங்களுக்கு நன்றாக நினைவில் இருந்துவிடும். என் உள்ளுணர்வு எனக்கு சொல்லும் என்று பெருமைப் படுவீர்கள். தோல்வி அடைந் தால் அதை அதிர்ஷ்டமின்மை என்று சொல்வீர்களே தவிர, உள்ளுணர்வு தோல்வி அடையும் என்று முன்ன மேயே எச்சரித்ததை மறந்து விடுவீர்கள்.

வெற்றியைக் கணித்ததில் மட்டுமே உள்ளுணர்வுக்கு பாராட்டு கிடைக்கும். தோல்வியைக் கணித்ததில் எந்தப் பாராட்டும் கிடைக்காது. உள்ளுணர்வு என்பது ஒரு விதத்தில் நடந்ததை நியாயப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியாகக்கூட பார்க்கலாம். உள்ளுணர்வை ஒரேயடியாகத் தூக்கி வைத்துக் கொண்டாடவும் வேண்டாம். ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்தவும் வேண்டாம்.

கடந்த கால அனுபவத்தை உள்வாங்கி வைத்திருப்பதன் மூலமே உள்ளுணர்வு என்பது நமக்கு இருக்கிறது. அது சொல்வது அத்தனையும் அப்படியே நிஜமாகிவிடப் போவதில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் நம்பிக்கை குறித்த இவ்வளவு பெரிய விளக்கம் என்கிறீர்களா? நாம் அனைவருமே இவற்றில் ஏதாவது ஒன்றில் அதீத நம்பிக்கையுடனும் இன்னொன்றில் நம்பிக்கை இல்லாமலும் இருக்கிறோம். ‘இந்த ஏரியாவில் நான் வீக்காக இருக்கிறேன்’ என்று தெரிந்துகொண்டு அதில் முனைப்புடன் இறங்கி, நம்பிக்கையை வளர்த் தெடுத்துக்கொள்வது சுலபம் என்பதால்தான் இவ்வளவு விளக்கம் தேவைப்படுகிறது என்று சொல்லும் ஆசிரியர், நம்பிக்கையை வளர்த்தெடுப்பது எப்படி என்பதற்கான வழிகளை வெறும் அறிவுரைகளாகச் சொல்லாமல் பல்வேறு லாஜிக்கலான வாதங்கள் மூலமும், ஆய்வு முடிவுகளில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மூலமும் விளக்கமாகக் கூறியுள்ளார்.

நம்பிக்கை என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, எதில் நாம் குறைவான திறனைக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து சரிசெய்து கொள்வது எப்படி எனப் பல விஷயங்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்துப் பயன் பெறலாம்.