Published:Updated:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதன்படி தற்போது பணி வழங்கப்படுகிறதா? | Doubt of Common Man

Job opportunities

உங்களுடைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் என்ன விதமான பயிற்சிகளை வழங்குகிறது எனத் தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்ட அரசு இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்புப் பிரிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Published:Updated:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதன்படி தற்போது பணி வழங்கப்படுகிறதா? | Doubt of Common Man

உங்களுடைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் என்ன விதமான பயிற்சிகளை வழங்குகிறது எனத் தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்ட அரசு இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்புப் பிரிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Job opportunities
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் விக்னேஷ் என்ற வாசகர், "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவு மூப்பின்படி ஏதாவது அரசுப் பணி வழங்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

வேலை இல்லா திண்டாட்டம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. ஒரே மாதிரியான படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது, தொழில்முனைவோர் பற்றாக்குறை எனப் பல காரணிகளால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்குப் பதிவு மூப்பின்படி வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் செயல்படுகின்றனவா, அவை மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியுமா என்ற கேள்வி நம் வாசகர் ஒருவருக்குத் தோன்றியிருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது 'டவுட் ஆஃப் காமன்' பக்கத்தில் மேற்கூறிய கேள்வியாகக் கேட்டிருந்தார்.

Employment opportunities
Employment opportunities

வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு ஓய்வு பெற்ற வேலைவாய்ப்புத்துறை அதிகாரி சுரேஷ் குமாரிடம் பேசினோம், "வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை கொடுக்கும் நிலை தற்போது இல்லை. போட்டித் தேர்வுகளின் மூலம்தான் தற்போது எந்தவொரு அரசுப் பணிக்குமான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டு மையங்களாகவும், திறன்மேம்பாட்டு மையங்களாகவும் மாற்றப்பட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன" எனக் கூறினார்.

2014-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொழில் நெறி காட்டும் மையங்களாக மாற்றப்பட்டன. அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

இதனைத் தொடர்ந்து 30.07.2019-ல் வெளியிடப்பட்ட அரசாணைப் படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில் வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பெயர்களை பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் பரிந்துரை செய்கின்றனர். சில வேலைவாய்ப்பு மையங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. சில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. வேலைக்குக் காத்திருப்பதைத் தவிர்த்து பயிற்சிகள் பெற்று தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில்தான் தற்போதைய வேலைவாய்ப்பு துறை இயங்கிவருகிறது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுடைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் என்ன விதமான பயிற்சிகளை வழங்குகிறது எனத் தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்ட அரசு இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்புப் பிரிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மாவட்டங்களின் இணையதளப் பக்கத்திற்குச் செல்ல...

(அந்த மாவட்டத்தின் பெயர்- ஆங்கிலத்தில்).nic.in

என்று இணையதள முகவரியை உள்ளிட வேண்டும். உதாரணமாக ஈரோடு மாவட்ட இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் erode.nic.in என்று முகவரியை உள்ளிட வேண்டும். உதாரணத்திற்கு கீழே நான்கு மாவட்டங்களின் வேலைவாய்ப்புப் பக்கங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்புப் பக்கத்திற்குச் செல்ல அந்தந்த மாவட்டத்தைக் கிளிக் செய்யவும்.

மதுரை, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி.

தேசிய வேலைவாய்ப்புக்கான இணையதளம்
தேசிய வேலைவாய்ப்புக்கான இணையதளம்

வேலை தேடும் இளைஞர்கள் தேசிய வேலைவாய்ப்புக்கான இணையதளத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உருவாக்கியிருக்கும் இந்த இணையதளம் வேலை தேடுபவர்களுக்கும் வேலை கொடுப்பவர்களுக்கும் இடையேயான ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறது. மாநில வாரியாக, தொழில் வாரியாக எத்தனைப் பணியிடங்கள் தனியார் மற்றும் அரசுத்துறையில் காலியாக இருக்கின்றன என்ற தகவல்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். வேலை தேடுபவர்கள் இந்த இணையதளத்திற்குச் சென்று பயனடையலாம்.

இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man