Published:Updated:

How To: தொடர்பு திறனை வளர்த்துக்கொள்வது எப்படி? | How To Develop Communication Skills?

communication ( Pixabay )

என்னதான் நீங்கள் நினைவாற்றலுடன் இருந்தாலும், ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் முன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் கூற வரும் எந்த விஷயத்தையும் தவற விட மாட்டீர்கள், மற்றும் தெளிவுடன் கூறுவீர்கள்.

தற்போதைய உலகத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு தகுதி தேவைப்படும். ஆனால் எந்தத் துறையாக இருந்தாலும் நமக்குத் தேவைப்படக்கூடிய ஒரு தகுதி... தொடர்பு திறன் (Communication Skills). அதற்கான அடிப்படைகள் இங்கே...

1. கேளுங்கள்

நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது, முதலில் அவர்கள் சொல்வதை கேளுங்கள். அதிகமாக பேசுவதை விட அதிகமாக கேட்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு விஷயத்திற்கும் சரியான விளக்கங்களை கேளுங்கள், தெளிவாகும்வரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

2. கவனமாக இருங்கள்

ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டும் பேசுங்கள். மின்னஞ்சலில் பதிலளித்துக்கொண்டு இருக்கும்போது தொலைபேசியில் வேறு யாருடனும் பேசிக்கொண்டு இருக்காதீர்கள். இதனால் கவனம் சிதறுவதுடன், நீங்கள் கூற வரும் விஷயங்களை சரியான முறையில் கூற முடியாது.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

3. எப்படி பேசுவது என்ற தெளிவுடன் இருங்கள்

நீங்கள் சாதரணமாக உங்களின் நண்பரிடம் பேசுவதை போன்றே, உங்கள் முதலாளியுடனும் பேசுவது சரியான முறை ஆகாது. முக்கியமாக நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவை. அவற்றை உங்கள் நண்பருக்கு அனுப்பும்போது வார்த்தைகளை ‘how r u' என்றெல்லாம் டிஜிட்டல் மொழியில் சுருக்கி அனுப்பலாம்; ஆனால் அதேபோல் உங்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்புவது தவறு.

4. உடல் மொழி

மற்றவர்களுடன் பேசுகையில் பேசுவதை போன்று உடல்மொழியும் மிக முக்கியம். அசௌகர்யத்தில் கைகளைக் கட்டிக்கொண்டோ கவனத்தை வேறு இடத்தில் வைத்துக்கொண்டோ பேசக் கூடாது. கண்களை நேருக்கு நேர் பார்த்து, உறுதியான குரலில், தெளிவாகப் பேச வேண்டும்.

5. குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

என்னதான் நீங்கள் நினைவாற்றலுடன் இருந்தாலும், ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் முன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் கூற வரும் எந்த விஷயத்தையும் தவற விட மாட்டீர்கள், மற்றும் தெளிவுடன் கூறுவீர்கள்.

குறிப்பெடுத்தல்
குறிப்பெடுத்தல்

டிப்ஸ்...

* அதிகமாகப் புரியவைக்க வேண்டிய விஷயங்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்தாமல் கால் செய்து பேசலாம்.

* அனைவரையும் உங்களுக்கு சமமாக பாவித்து பேசுங்கள். யாரையும் கீழ்மையாக நினைத்து பேசாதீர்கள்.

* என்ன பேசினாலும் நேர்மறை வார்த்தைகள், எண்ணத்துடனும், புன்னகையுடனும் பேசுங்கள்.

* பேசுவதற்கு முன், அந்த வார்த்தைகள், விஷயம் சரிதானா என்று யோசியுங்கள். ஒரு விஷயத்தை ஏன் சொல்கிறீர்கள், அதை எப்படி சொல்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தினால், உரையாடலால் ஏற்படும் அசௌகர்யங்களை தவிர்க்கலாம்.