Published:Updated:

How to: நேர்காணலில் உங்களை சுயஅறிமுகப்படுத்துவது எப்படி?How to Introduce Yourself in an Interview?

Interview ( Pixabay )

அறிமுக உரை சுருக்கமாக இருக்க வேண்டும். பேசிக்கொண்டே இருக்காதீர்கள். பெர்சனல் தகவல்கள் அதிகம் பகிராதீர்கள்; உங்கள் தகுதி, திறமையே கருவாக இருக்கட்டும். துறைரீதியான முந்தைய சாதனைகள் பற்றிப் பேசும்போது அது ஓவராகச் சென்றுவிடாமல் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

Published:Updated:

How to: நேர்காணலில் உங்களை சுயஅறிமுகப்படுத்துவது எப்படி?How to Introduce Yourself in an Interview?

அறிமுக உரை சுருக்கமாக இருக்க வேண்டும். பேசிக்கொண்டே இருக்காதீர்கள். பெர்சனல் தகவல்கள் அதிகம் பகிராதீர்கள்; உங்கள் தகுதி, திறமையே கருவாக இருக்கட்டும். துறைரீதியான முந்தைய சாதனைகள் பற்றிப் பேசும்போது அது ஓவராகச் சென்றுவிடாமல் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

Interview ( Pixabay )

வேலை தேடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு முன் இருக்கும் சவால், நேர்காணல்களை எதிர்கொள்வதே. இன்டர்வியூக்களில் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விடவும் மிக முக்கியமானது, நம்மைப் பற்றிய சுய அறிமுக உரை (self introduction). அதில் நம் கல்வித் தகுதி, முன் அனுபவம், ஆர்வம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

Interview
Interview
Pexels

நேர்காணலுக்கு நாம் நம்மை எவ்வாறு தயார் செய்துகொள்வது மற்றும் நம்மைப் பற்றிய அறிமுக உரையில் எவற்றையெல்லாம் கூறுவது அவசியம் என்ற வழிகாட்டல் இங்கே...

நேர்காணலுக்குச் செல்லும் முன் கவனத்தில்கொள்ள வேண்டியவை...

* பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள். நேர்காணலுக்குச் செல்லும் பணி, அந்த நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாடு குறித்தெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் உடை அணிந்து செல்வது நல்லது.
* நேர்காணல் செய்பவருக்கு விஷ் செய்வதில் இருந்து உங்கள் நேர்காணலை ஆரம்பியுங்கள். ஒரு சின்ன கை குலுக்கலில் ஆரம்பித்து, நேர அவகாசத்தைப் பொறுத்து வணக்கங்களைக் கூறி ஆரம்பிக்கலாம்.

Interview
Interview
Pexels

* என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்து செல்லுங்கள். தேவையானவற்றைக் குறிப்பிட மறந்திடாமல் இருக்க, முன்கூட்டியே ஒரு சின்ன ஒத்திகை பார்த்துக்கொள்ளலாம். உங்களுடைய அறிமுக உரையை தெளிவாக எடுத்துரையுங்கள்.

அறிமுக உரையில்...

* முதலில் நீங்கள் யார் என்பதைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் யார் என்பதில் உங்களுடைய பெயர், ஊர் போன்றவற்றைக் கூற வேண்டும்.
* அடுத்ததாக உங்களுடைய கல்வித் தகுதி. நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், என்ன மாதிரியான கோர்ஸ்களைக் கற்று வைத்துள்ளீர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
* கல்வித் தகுதி குறித்த விவரங்களைத் தெரிவித்த பின், ஏற்கெனவே பணி செய்த முன் அனுபவம் இருந்தால் அது பற்றித் தெளிவாகக் கூற வேண்டும்.

Interview
Interview
Pexels

* கூடுதலாக உங்களுடைய பொழுதுபோக்கு விஷயங்கள், உங்களுடைய ஆர்வங்கள் எனத் தெரிவிக்கலாம்.

* அறிமுக உரை சுருக்கமாக இருக்க வேண்டும். பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.

* பெர்சனல் தகவல்கள் அதிகம் பகிராதீர்கள்; உங்கள் தகுதி, திறமையே கருவாக இருக்கட்டும்.

* துறைரீதியான முந்தைய சாதனைகள் பற்றிப் பேசும்போது அது ஓவராக சென்றுவிடாமல் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

நேர்காணல் செய்யப்படும்போது...

* அறிமுக உரைக்குப் பின், நேர்காணல் செய்பவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருங்கள். முடிந்த அளவுக்கு பயத்தையும் பதற்றத்தையும் தவிர்த்து, தன்னம்பிக்கை யுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ளுங்கள்.
* நேர்காணல் முடிந்ததும் எழுந்து நின்று, நேர்காணல் செய்தவரின் கைகளைப் பற்றிக் குலுக்கி, புன்னகையுடன் நன்றி சொல்லுங்கள்.

Interview
Interview
Pexels

* நேர்காணலை பாசிட்டிவ் வார்த்தைகளுடன் முடிப்பது முக்கியம். ``உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு வரும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ போன்ற வாக்கியங்களுடன் முடிக்கலாம்.