Published:Updated:

How to: கூகுள் பிசினஸ் புரொஃபைல் உருவாக்குவது எப்படி? | How To Set Up A Google Business Profile?

கூகுள்

சிறிய அளவில் வணிகம் செய்பவர்கள் தங்கள் தொழிலை கூகுள் சேர்ச் மற்று மேப்களில் புரொமோட் செய்ய கைக்கொடுக்கும் இலவச டூல், கூகுள் புரொஃபைல். இதன் மூலம் வாடிக்கையாளருடன் கனெக்ட் ஆகவும், உங்கள் தொழிலை பற்றிய அப்டேட்களை பதிவேற்றவும் முடியும்.

Published:Updated:

How to: கூகுள் பிசினஸ் புரொஃபைல் உருவாக்குவது எப்படி? | How To Set Up A Google Business Profile?

சிறிய அளவில் வணிகம் செய்பவர்கள் தங்கள் தொழிலை கூகுள் சேர்ச் மற்று மேப்களில் புரொமோட் செய்ய கைக்கொடுக்கும் இலவச டூல், கூகுள் புரொஃபைல். இதன் மூலம் வாடிக்கையாளருடன் கனெக்ட் ஆகவும், உங்கள் தொழிலை பற்றிய அப்டேட்களை பதிவேற்றவும் முடியும்.

கூகுள்

இன்றைய இணைய யுகத்தில், கூகுளை பயன்படுத்தாதவர்களே பெரும்பாலும் இல்லை எனலாம். அந்தளவுக்கு காலையில் கண் விழிப்பதில் தொடங்கி இரவில் உறங்கப்போகும் வரை கூகுளின் பயன்பாடு உள்ளது. இவ்வாறு நமது தனிப்பட்ட தேவைக்கென்று மட்டுமல்லாமல், ஒருவரின் வணிக வளர்ச்சிக்கும் கூகுள் கைக்கொடுக்கக்கூடியது. அதற்குத் தேவை, கூகுள் பிசினஸ் புரொஃபைல்.

g mail
g mail

கூகுள் புரொஃபைல் என்றால் என்ன? 

சிறிய அளவில் வணிகம் செய்பவர்கள் தங்கள் தொழிலை கூகுள் சேர்ச் மற்று மேப்களில் புரொமோட் செய்ய கைக்கொடுக்கும் இலவச டூல், கூகுள் புரொஃபைல். இதன் மூலம் வாடிக்கையாளருடன் கனெக்ட் ஆகவும், உங்கள் தொழிலை பற்றிய அப்டேட்களை பதிவேற்றவும், உங்கள் கஸ்டமர்கள் கூகுளில் உங்கள் தொழிலுடன் எவ்வாறு இணைகிறார்கள் என்பதையும் பார்க்கலாம். உங்கள் தொழில் சம்பந்தமாக ஒருவர் கூகுளில் தேடும்போது, அந்த வாடிக்கையாளர்களுக்கு உங்கள் விவரங்கள் கிடைக்கப்படும். இந்த புரொபைல் மூலம் உங்கள் வணிகத்திற்கான சரியான லொக்கேஷன் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ள chat, contact போன்ற அம்சங்கள் இருப்பதால் அவர்களால் எளிதாக உங்களை அணுக இயலும். ஒருவர் தனக்கான கூகுள் பிசினஸ் புரொஃபைலை எப்படி அமைப்பது என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

* முதலில் உங்களுக்கென ஒரு gmail ஐடி உருவாக்கிக் கொள்ளவும். ஏற்கெனவே இருந்தால் அதனை உங்களுடைய வணிகத்திற்கு என்று பிரத்யேகமாக உருவாக்கிக் கொள்ளவும்.

* அடுத்ததாக உங்களுடைய லேப்டாப் அல்லது மொபைலில், https://www.google.com › intl › en_in › business என்ற இணையதள முகவரியை சரிபார்த்து உள்ளே செல்லவும்.

* திறக்கும் பக்கத்தில், Sign in என்று இருக்கும் பகுதியை கிளிக் செய்த பின் உங்களுடைய பிசினஸ் பெயரை உள்ளிடுமாறு கேட்கும். அந்த இடத்தில நீங்கள் உங்களுடைய பிசினஸ் பெயரை உள்ளீடு செய்யவும்.

* Next என்று கொடுத்த பின், உங்களுடைய பிசினஸ் எந்த பிரிவை சேர்ந்தது, ஆன்லைன், உள்ளூர் வணிகமா, சேவை தொடர்பானதா என்பதையெல்லாம் பார்த்து எந்த வகையானது என்பதை தேர்ந்தெடுத்து Next கொடுத்துக்கொள்ளவும்.

திறன் முன்னேற்றம்
திறன் முன்னேற்றம்

* தொடர்ந்து உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான வணிகத்தின் பெயர் மற்றும், முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளவும். கூடவே மேப் மார்க்கர் மூலம் இருப்பிடத்தை குறிக்கவும்.

* உங்களுடைய வணிகத்தின் நேரத்தை குறிப்பதற்கு என  இருக்கும் பகுதியில் அந்த விவரங்களை நிரப்பிக்கொள்ளவும்.

* NEXT என்று கொடுத்து, திறக்கும் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை அனுமதிப்பதற்கான இடத்தில் yes கொடுத்து, உங்களுடைய வணிகத்தை பற்றிய முழு விவரங்களைக் குறிப்பிடவும்.

* தேவையெனில் வணிகம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யலாம். விருப்பப்பட்டால் உங்களுடைய வணிகத்திற்கான விளம்பரங்களை பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.  

*உங்களுடைய Google Business Profile தயாராகிவிடும். சில மணி நேரங்களிலேயோ, சில நாள்களிலோ உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும்.