
News
கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, `இந்த அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது’ என்று பல மேடைகளில் பேசியிருக்கிறார். கடந்த ஜூன் மாதம், `` `ரோஜ்கர் மேளா’ - வேலைவாய்ப்பு கண்காட்சி மூலம் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று உறுதியளித்தார். ஆனால், கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த டிசம்பர் 2022-ல் உச்சம் தொட்டிருப்பதாகச் சொல்கிறது `இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்.’ மேலும் கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது பற்றிய தரவுகள் இங்கே...
