Published:Updated:

வானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்?! #DoubtOfCommonMan

வானிலை

கடந்த சில ஆண்டுகளாக வானிலை சார்ந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் உண்டாகியிருக்கிறது. தொடர்ச்சியாக ஏற்பட்ட புயல், மழை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள்தான் அதற்குக் காரணம்.

Published:Updated:

வானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்?! #DoubtOfCommonMan

கடந்த சில ஆண்டுகளாக வானிலை சார்ந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் உண்டாகியிருக்கிறது. தொடர்ச்சியாக ஏற்பட்ட புயல், மழை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள்தான் அதற்குக் காரணம்.

வானிலை

வானிலை சார்ந்த விஷயங்கள் மட்டுமன்றி வானிலை சார்ந்த படிப்புகள் மீதும் மாணவர்களின் கவனம் திரும்பியிருப்பதையும் கவனிக்க முடிகிறது.

காற்றழுத்த தாழ்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மையம்
''பி.இ எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் முடித்துள்ளேன். வானிலை ஆராய்ச்சியில் முதுநிலை பட்டப்படிப்பு தொலைதூர கல்வியில் பயில விரும்புகிறேன். ஏதேனும் கல்விநிறுவனங்கள் இருக்கின்றதா?" என்று விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் கேள்வியெழுப்பியிருக்கிறார் வாசகர் பி.கோவிந்தராஜன்.

இந்தக் கேள்வியைக் கல்வியாளர் ராஜராஜன் முன் வைத்தோம்.

"வானிலை என்பது பருவநிலை, தட்பவெப்பம், சுற்றுப்புறச் சூழல் மாற்றங்களை ஏற்படுத்தும் (இயற்கை மற்றும் செயற்கை) காரணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வானிலை பற்றி அறிந்துகொள்ள, பூமியைப் பற்றியும், பூமி இடம் பெற்றுள்ள வானவியல் மண்டலம் மற்றும் சூரியக் குடும்பம் பற்றியும், பூமியைச் சுற்றியுள்ள பல்வேறு வாயு மண்டலங்கள் பற்றியும், பூமியில் உள்ள இயற்கைக் கூறுகளைப் பற்றியும் தெளிவான அறிவைப் பெற வேண்டியது அவசியம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வானிலைத் தொடர்பான படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன.
கல்வியாளர் ராஜராஜன்

வானிலை சார்ந்த படிப்புகள் பருவநிலையியல், புயல்கள், சுனாமி, ஊழிக்காற்று, சூறாவளி, மழை, விவசாயம் துணைக்கோள்கள், ரேடார் , சோனார் ஆகியவற்றை உள்ளடக்கியது. அந்தப் படிப்பில் 'வாயு மண்டலம், வானிலை மாற்றங்கள், வானிலை மாற்றங்களை முன்னறிதல், அவற்றுக்கான வரைபடங்கள் தயாரித்தல், கணினி விவரங்கள், விவசாயத்துக்குத் திட்டமிடல், மீனவர்களுக்காக அறிவிப்பு, பேரிடர் எச்சரிக்கை, நீர் மேலாண்மை ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள்.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

வானிலை சார்ந்து ஏராளமான படிப்புகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஏரோலாஜி (Aerology) - காற்றைப் பற்றிய படிப்பு.

ஏரோனமி (Aeronomy) - மேலடுக்கு வாயு மண்டலத்தைப் பற்றிய படிப்பு.

அக்ரிகல்சுரல் மெட்டராலஜி (Agricultural Meteorology),

வெதர் இன்பர்மேஷன் (Weather Information) - பயிர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பருவகால மாற்றம் பற்றிய படிப்புகள்.

ஏர் பொல்யூசன் கன்ட்ரோல் (Air Pollution Control) - காற்று மாசுக் கட்டுப்பாடு பற்றிய படிப்பு.

ஆர்க்கிடெக்சுரல் டிசைன் ( Architectural Design ) - வானிலைக்கு ஏற்ற கட்டடக்கலை தொடர்பான படிப்பு.

ஏர் கன்ட்ரோல் பிளான்ட்ஸ் (Air Control Plants) - காற்று வெப்பக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பற்றிய படிப்பு.

கிளைமேட்டாலஜி (Climatology) - பருவநிலை மாற்றங்கள் பற்றிய படிப்பு.

பிசிக்கல் மெட்டெராலஜி (Physical Meteorology )- வாயு மண்டல இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் பற்றிய படிப்பு.

சினாப்டிக் மெட்டராலஜி (Synoptic meteorology) - குறைந்த காற்றழுத்தம், காற்றடர்த்தி, காற்று சுழற்சி பற்றிய படிப்பு.

டைனமிக் மெட்டராலஜி (Dynamic Meteorology)- வாயு மண்டலத்தில் எண்வடிவம் பற்றிய படிப்பு.

வானிலை தொடர்பான படிப்புகளைப் படிக்க ப்ளஸ் டூவில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர், புவியியல் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், வளிமண்டல அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் (B.Tech & M.tech (Atmospheric Science) உள்ளன. அதோடு, இளங்கலை மற்றும் முதுகலை வானியல் அறிவியல் (B.Sc & M.Sc Meteorology) படிப்புகளும் உள்ளன.
கல்வியாளர் ராஜராஜன்

எங்கு படிக்கலாம்?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும், பருவநிலை மாற்றம் மற்றும் இசைவாக்க ஆராய்ச்சி மையத்தில் (Centre for Climate Change and Adaptation Research) வானிலை தொடர்பான படிப்புகள், பயிற்சிகள், இயற்கை சுற்றுப்புற மேலாண்மை பற்றிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கோயம்புத்தூர், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில், அக்ரோ மெட்டராலஜி படிப்பில் முதுகலை படிக்கலாம். அதில் சேர்வதற்கு, B.Sc Horticulture, B.Sc Agriculture, B.Sc (Forestry, Bachelor of Veterinary Science, Bachelor of Fisheries Science, B.Tech Agricultural Engineering, B.Tech food Tech, B.Tech Agricultural Bio Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

அண்ணா யுனிவர்சிட்டி
அண்ணா யுனிவர்சிட்டி

மேற்கண்ட இளநிலைப் படிப்புகளில் சேர ப்ளஸ் டூவில், இயற்பியல், வேதியியல், புவியியல் (Physics, Maths, Geography) படித்திருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், வளிமண்டல அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் (B.Tech & M.tech (Atmospheric Science) உள்ளன. அதோடு, இளங்கலை மற்றும் முதுகலை வானியல் அறிவியல் (B.Sc & M.Sc Meteorology) படிப்புகளும் உள்ளன.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள University of Utah, University of South of Alabama, மின்சோட்டாவில் உள்ள, Saint Cloud State – Minnesota, Western Illinois – Macomb ஆகிய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் Physical Science, Earth Sciences Meteorology படிப்புகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

முதுகலை வானியல் அறிவியல் படிப்பு (M.Sc Meteorology), கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், மஹாராஷ்ட்ர மாநிலம், கோலாப்பூரில் உள்ள ஷிவ்ராஜ் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகம், கேரளாவில் உள்ள கொச்சின் பல்கலைக்கழகம், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அடல் பிகாரி ஹிந்தி விஸ்வ வித்யாலயா ஆகிய நிறுவனங்களில் இருக்கின்றன. இந்தப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination-JEE), நெஸ்ட் (NEST ) தேர்வு ஆகியவற்றின் வழியாக நடத்தப்படும்.

சுற்றுப்புற அறிவியல் சார்ந்த படிப்புகள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பிஷப் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ளன. சுற்றுப்புற சூழலில் முதுகலைப் படிப்பு (M .Tech) சென்னை எஸ்.எஸ்.என் (SSN) கல்லூரியில் உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
வானிலை தொடர்பாகப் படித்தவர்கள், Indian Meteorological Department, வானிலை ஆய்வு, விவசாயத் திட்டமிடல் , சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு, வான்படை, கடற்படை, பருவகால கட்டுப்பாடு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியலாம்.
கல்வியாளர் ராஜராஜன்

மேலும், வானிலை, சுற்றுப்புறசூழல் தொடர்பான படிப்புகள், ஐ.ஐ.டி காரக்பூர், ஐ.ஐ.டி டெல்லி, சாவித்திரி பாய் பூலே பல்கலைக்கழகம் புனே, அகல் கல்லூரி இமாசலப் பிரதேசம், ஆந்திரா பல்கலைக்கழகம், ஒடிசா பல்கலைக்கழகம், ரங்கராஜ் மருத்துவக் கல்லூரி, ஆந்திரா, சிவாஜி பல்கலைக்கழகம் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள University of Utah, University of South of Alabama, மின்சோட்டாவில் உள்ள, Saint Cloud State – Minnesota, Western Illinois – Macomb ஆகிய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் Physical Science, Earth Sciences Meteorology படிப்புகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன.

வானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்?! #DoubtOfCommonMan

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வானிலைத் தொடர்பான படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன.

எந்த வேலைக்குச் செல்லலாம்?

வானிலை தொடர்பாக படித்தவர்கள், Indian Meteorological Department, வானிலை ஆய்வு, விவசாயத் திட்டமிடல் , சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு, வான்படை, கடற்படை, பருவகால கட்டுப்பாடு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியலாம். குறிப்பாக, Dept., of Agricultural Organisation, National Remote Sensing Agencies, Indian Space Research Organisation, Dept., of Science & Technology போன்ற துறைகளிலும் வாய்ப்புண்டு.

தேர்வுகள்?

Indian Meteorology Service Test என்ற தேர்வு, வானியல் துறையில் உயர் பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. Staff Service Commission - வானியல் துறையில் ஊழியர்களை பணியமர்த்த எழுத்துத் தேர்வை நடத்துகிறது. Indian Meteorology Department, II Grade பதவிக்கு Union Public Service Commission தேர்வை நடத்துகிறது.

Doubt of Common Man
Doubt of Common Man

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.