Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடையைச் சொல்லும் கண்டுபிடிப்பு !

அ.சியாமளா கௌரி படங்கள் : மு.குகன்

‘‘நான் இருப்பது மலைப்பிரதேசம். சாயங்காலத்தில் சீக்கிரமே இருட்டிடும். ஒருமுறை சைக்கிளில் வேகமா வந்தப்போ, சாலையில் இருந்த வேகத்தடையைக் கவனிக்காமல் விழுந்துட்டேன். டூ வீலரில் வர்றவங்களுக்கும் இந்த மாதிரி பிரச்னை ஏற்படுமே. இதுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அப்போ, உருவான ஐடியாதான் இது” என்கிறார் கோகுல்.

உதகை மாவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்  கோகுல். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நான்காவது தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில் இரண்டாவதாக வந்து, ‘இன்ஸ்பையர்’ (INSPIRE) விருது பெற்றுள்ளார்.

“டெல்லி பிரகதி மைதானத்தில், அக்டோபர் 6 முதல் 8 வரை கண்காட்சி நடந்தது.  தமிழ்நாட்டில் இருந்து சென்ற 41 பேரில் நானும் ஒருவன். நான் உருவாக்கியது வேகத் தடையை அறியும் கருவி. சீரான சாலையில் வாகனம் செல்லும்போது, மேடு, பள்ளங்களை 30 அடிகளுக்கு முன்பே கண்டுபிடித்து  அறிவிக்கும். இன்ஃப்ராரெட் கதிர்கள் எனப்படும் இது, ஓட்டுநர் தூங்கிவிட்டாலும், விழிகளின் ஓட்டத்தைக் கண்டு்பிடித்து, எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தி, இன்ஜின் வேகத்தையும் குறைத்துவிடும்’’ என்கிறார் கோகுல்.

தேசிய அறிவியல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது. துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியுடன் சிறப்பு சந்திப்பும் நடைபெற்றது. 

“அடுத்து, இன்ஜின் இல்லாமல் பேட்டரியில், செயல்படக்கூடிய ஆட்டோவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். அடுத்த வருடம், தேசிய அளவில் தங்கம் வெல்வேன்” என்ற கோகுலின் குரலில் ஒலித்தது நம்பிக்கை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஜாக் ஜாக் ஜில் ஜில் !
அம்மாவுக்காக ஒரு கண்டுபிடிப்பு !
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close