ஒரு தேதி...ஒரு சேதி...

நவம்பர் 16-30

அன்புச் சுட்டிகளுக்கு...

 பூ.கொ.சரவணன் பேசுகிறேன்.

'இன்றைய செய்திகள் நாளைய வரலாறு’. இது ஏன் இப்படி இருக்க வேண்டும்? இதை எப்படி மாற்றுவது? எனச் சிந்தித்து, நேற்றைய விஷயங்களை மாற்றியவர்கள்தான் இன்றைய வரலாற்று நாயகர்கள். நாமும் நாளைய வரலாற்றை உருவாக்க முடியும். அதற்கு, வரலாற்று நாயகர்கள் பற்றி தெரிந்து கொள்வது  வழிகாட்டியாக இருக்கும். அந்த வழிகாட்டியாக 'ஒரு தேதி... ஒரு சேதி’ இருக்கும்.

¬'பஞ்சாப் சிங்கம்’ என அழைக்கப்பட்டவர், லாலா லஜ்பத் ராய். பிறப்பு முதல் இறப்பு வரை இவருக்கு எத்தனை போராட்டங்கள்? ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கல்லூரிக்குச் செல்ல வறுமையோடு போராடியவர். உலகின் சிறந்த படைப்புகளை இந்தியர்களிடம் சேர்ப்பிக்க, எழுத்தாளராகப் போராடினார். நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். அவரது போராட்டங்கள் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க சிலிர்க்கும். அந்த அனுபவத்துக்கு நீங்கள் தயாரா?

இன்னும் பல சுவையான செய்திகளுடன் காத்திருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick