அஸ்ட்ரோ பாய்

 

ஜப்பானின் 'மங்கா காமிக்ஸின் பிதாமகன்’ என்று அழைக்கப்படும் ஒசாமு டெசுகா(Osamu Tezuka)  உருவாக்கிய புகழ்பெற்ற கதாபாத்திரம், அஸ்ட்ரோ பாய். ஒசாமு டெசுகா, தன் வாழ்நாளில் ஒன்றரை லட்சம் பக்கங்களுக்கு மங்கா காமிக்ஸ்களை வரைந்திருக்கிறார். ஜப்பானில் அஸ்ட்ரோ பாய் கதாபாத்திரத்தை 'மைட்டி ஆட்டம்’ என்றுதான் பெயரிட்டார்கள். உலக அளவில் மைட்டி ஆட்டம் பிரபலமடையத் தொடங்கிய பிறகுதான், 'அஸ்ட்ரோ பாய்’ என்று பெயர் சூட்டினார்கள். பெயரில் சிறுவன் என்று இருந்தாலும் அஸ்ட்ரோ பாய் உண்மையில் மனிதர்களுடன் சேர்ந்து வாழும் ஒரு ரோபோட். லட்சம் குதிரைத் திறன் ஆற்றல், ஒரு ஜெட் விமானத்தைப் போல பறக்கும் சக்தி, அதிக அளவு ஒளி வீசும் தன்மையுடைய கண்கள் என்று, ஏழு விதமான சக்திகளைக்கொண்டு எதிரிகளை வீழ்த்துவான் இந்த அஸ்ட்ரோ பாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்