அக்கறைத் தொட்டி!

கதை: ப.சூரிய ராஜ்ஓவியம்: ஜி.சுதர்ஸனா

ண்ணன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ஒருநாள், பள்ளி முடிந்து தனது நண்பனுடன் வீடு திரும்பும்போது, அந்தக் காட்சியைக் கண்டான். அவனது வீடு இருக்கும் தெருமுனையில் அந்தக் குப்பைத் தொட்டி இருந்தது. ஒரு பசுமாடு, குப்பைகளில் கிடந்த காய்கறிக் கழிவுகளைத் தின்று கொண்டிருந்தது.

 ''ரகு, அங்கே பாரேன். காய்கறிக் கழிவுகளோடு சேர்த்து, பிளாஸ்டிக் கவர்களையும் மற்ற குப்பைகளையும் சாப்பிடுது. குப்பையைக் கொட்டுறவங்க, காய்கறி, பழத் தோல்களைத் தனியா கொட்டினால், ஆடு, மாடுகள் சுத்தமாகச் சாப்பிடுமே' என்றான் கண்ணன்.

''விட்டால், தனி குப்பைத் தொட்டி வைக்கணும்னு கார்ப்பரேஷனுக்கு மனு போடுவே போலிருக்கே. தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கிறதே பெரிய விஷயம். அப்படியே வெச்சாலும், நம்ம மக்கள் அக்கறையா பிரிச்சுப் போடுவாங்களா என்ன? பேசாம வாடா' என்று சைக்கிளை வேகமாக மிதித்தான் ரகு.

கண்ணனுக்குள் புதிய யோசனை உருவானது. வீட்டுக்கு வந்ததும், 'அம்மா, பழைய குடம் ஒண்ணு இருந்துச்சே எங்கே?' என்று கேட்டு விஷயத்தைச் சொன்னான்.

அம்மா, அந்தக் குடத்தின் வாயைக் கத்தரித்து அகலமாக்கினார். கண்ணன், ஓர் அட்டையில் என்னமோ எழுதி, நீளமான கொம்பில் அதைச் செருகினான். அந்தக் குடத்தில் சில காய்கறி, பழத் தோல்களைக் கொட்டினார்கள். அதைக் கொண்டுபோய், அந்தக் குப்பைத் தொட்டிக்கு சற்றுத் தள்ளி வைத்தார்கள். குடத்தின் அருகிலேயே அந்த அறிவிப்பு கொம்பைச் செருகினான் கண்ணன்.

'அக்கறைத் தொட்டி  அன்பானவர்களுக்கு... காய்கறி, பழத் தோல்களை இந்தத் தொட்டியில் தனியாகப் போடவும். நம்மைப் போல பிற உயிர்களும் தூய்மையாகச் சாப்பிடட்டும்' என்ற வாசகங்கள் அதில் இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick