ஒரு ஊருல ஒரு பூதம்!

கதை: டெக்ஸ்ஓவியம்: ஜி.வித்யா 5-ம் வகுப்பு

து ஊரை ஒட்டி ஒரு காடு. அங்கே ஒரு பூதம் இருந்தது. கஷ்டத்தில் இருக்கும் அப்பாவிகளுக்கு, நல்லது செய்வது போல செய்து, பிறகு அவர்களை அடிமையாக்கிக் கொள்ளும்.

 

அதே ஊரில் இருந்த ஒரு வியாபாரிக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இறந்துவிடலாம் எனக் காட்டுக்குள் வந்த வியாபாரியைத் தடுத்த பூதம், ''உனக்கு ஒரு வரம் தருகிறேன். வீட்டுக்குப் போய்ப் பார். வீடு முழுவதும் செல்வம் இருக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. 10 வருடங்களுக்குத்தான் அனுபவிக்கலாம். பிறகு, நீ எனக்கு அடிமை'' என்றது.

சம்மதித்த வியாபாரியிடம் பத்திரம் ஒன்றில் எழுதி வாங்கிக்கொண்டு, 'என்னை ஏமாற்ற நினைக்காதே. நான் நினைத்தால், எந்த உருவத்தையும் எடுப்பேன்' என்றது.

வீட்டுக்குப் போனான் வியாபாரி. 10 வருடங்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தான். குறிப்பிட்ட நாளில், ஒரு சாக்குப் பையை எடுத்துக்கொண்டு காட்டுக்கு வந்தான். பூதத்தின் குகைக்கு அருகில் வந்ததும், 'ஏ... பூதமே, நினைத்த உருவத்தை அடைவாய் என்று சொன்னாயே, எலியாக மாறிக் காட்டு பார்ப்போம்' என்றான்.

உடனே, பூதம் சுண்டெலியாக மாறியது. வியாபாரி சட்டென அதைப் பிடித்து சாக்குப் பையில் போட்டு, அடிக்க ஆரம்பித்தான். பூதம் வலியால் கதறியது. 'என்னை விட்டுவிடு' என்று கெஞ்சியது.

'நான் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பத்திரத்தைக் கொடுத்துவிடு. பிற அடிமைகளையும் விடுவிக்க வேண்டும்' என்றான் வியாபாரி.

பூதம் சம்மதித்தது. குகைக்குள் இருந்த அடிமைகள் விடுவிக்கப்பட்டார்கள். அடிமைப் பத்திரங்களைக் கொடுத்துவிட்டு, தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்தது பூதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick