Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுட்டி ஸ்டார் நியூஸ்

வைட்டமின் - வேதிப்பெயர்!

1. வைட்டமின் A - கரோட்டின்
2. வைட்டமின் B - தையாமின்
3. வைட்டமின் C - அஸ்கார்பிக் அமிலம்
4. வைட்டமின் D - கால்ஸிஃபெரால்
5. வைட்டமின் E - டோக்கோஃபெரால்
6. வைட்டமின் F - லினோலிக் அமிலம்
7. வைட்டமின் L - பைலோகுயினைன்
8. வைட்டமின் T - ஃபோலிக் அமிலம்                                                                                                                                        

சிசு.நந்தகிஷோர்
ஸம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி,
புதுக்கோட்டை.

உஷார் டானி உஷார்!

ஆஸ்திரேலியாவில் காணப்படும் பறவைகளில் ஒன்று, டானி ஃப்ராக்மவுத் (Tawny Frogmouth). பார்ப்பதற்கு ஆந்தையைப் போலவே இருக்கும். இதன் உடல் மரப்பட்டை நிறத்தில் இருப்பதால்,    பிற உயிர்களால் இதை அறிய இயலாது.    கிளைகளுக்கு நடுவே வாயைத் திறந்துகொண்டு அசையாமல் இருக்கும்.  சிறிய பறவைகள், பூச்சிகள், எலி, தவளை போன்றவை அருகே வந்தவுடன் சட்டெனப் பிடித்து, வாயை மூடிக்கொள்ளும். அவ்வளவுதான்... அன்றைய சாப்பாடு முடிந்தது.          

அ.தமிழ் அரும்பி
செயின்ட் தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளி,
திருத்துறைப்பூண்டி.

நீளத் தண்டவாளம்!

உலகின் மிகப் பெரிய தொடர்வண்டிப் பாதை, டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே (Trans Siberian Railway). இது, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து, சீ ஆஃப் ஜப்பான் அருகில் உள்ள  விளாடிவாஸ்க் நகரம் வரை கிழக்கு ரஷ்யா வழியே செல்கிறது. 1891-1916-க்கு இடையிலான காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் பாதையின் நீளம் 9,289 கிலோமீட்டர்.                                                                                 

ஓ.ஓபுளிகிஷோர்
சௌத் இந்தியன் மெட்ரிக் பள்ளி,
ஓமலூர், சேலம்.

பூவா... தலையா?

கா்சை சுண்டிப் பார்த்து (Toss), முடிவு எடுக்கும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள். அந்தக் காலத்தில், ஜூலியஸ் சீசரின் தலை பொறித்த காசை சுண்டிப் பார்த்துதான், ரோமானியர்கள் எந்த முடிவையும் எடுப்பார்கள்.                                                                              

பா.பவன் சுப்பு
பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி ஸ்கூல்,
திருவான்மியூர்,சென்னை-41.

கசங்கிய கட்டடம்!

கசங்கிய காகிதங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கசங்கிய கட்டடம் ஒன்றை உருவாக்கி, பார்வையாளர்களுக்காகத் திறந்துவைத்துள்ளது. மூன்றரை லட்சம் செங்கற்கள் மற்றும் மரப் பலகைகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறப் பகுதிகள், ஏராளமான வளைவு நெளிவுகளுடன் காணப்படுகின்றன. எந்த அறையும் வழக்கமான சதுரம், செவ்வகமாக இல்லை.                                                                                                                                                                      

ச.மதுரவாணி
ஜேப்பியார் பள்ளி,
செம்மஞ்சேரி, சென்னை.

கல் மீன்!

உலகிலேயே அதிக விஷம்கொண்டது, கல் மீன் (Stone fish). கடலின் தரையில்,  பவளத்திட்டுப் பாறைகளுக்கு அருகில் வசிக்கும். தன்னுடைய துடுப்பால் மண்ணைக் கிளறும். அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும். அருகில் தனக்கான  இரை வந்ததும், தன் உடம்பில் உள்ள  முட்களால் விஷத்தைச் செலுத்தி, செயலிழக்கவைத்து, உணவாக்கிக் கொள்ளும். மனிதர்கள் மீது இதன் முள் பட்டாலும் பிழைப்பது கஷ்டம். இந்தியப் பெருங்கடலில் இந்த மீன்கள் காணப் படுகின்றன.             

ஸ்ரீ மீரா சுப்பிரமணியன்
ஆதர்ஷ் வித்யா கேந்திரா,
நாகர்கோவில்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பார்வையால் ருசிக்கலாம்!
சூப்பர் 6
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close