பென்டிரைவ்

னது முதல் பயணத்திலேயே (1912, ஏப்ரல் 14) விபத்தைச் சந்தித்து மூழ்கிய, டைட்டானிக் கப்பலின் சோக வரலாறு, 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. ஆனாலும், சினிமாவில் தொடங்கி பல்வேறு வடிவங்களில் மக்கள் நினைவு அலைகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய நினைவு அலை, டைட்டானிக் மியூசியம். அமெரிக்காவின் மிஸ்சோரி (Missouri) மாகாணத்தில் உள்ள பிரான்சன் (Branson) நகரில், டைட்டானிக் கப்பல் வடிவிலேயே அமைக்கப்பட்டு இருக்கிறது. டைட்டானிக் கப்பலில் இருந்ததைப் போன்ற பிரமாண்ட படிக்கட்டுகள், அறைகள் என அனைத்தும் பிரமிக்கவைக்கின்றன.விபத்தில் உயிர் இழந்த அனைவரின் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மியூசியத்தில் நுழைந்தால், கால இயந்திரத்தில் சென்றுவந்த உணர்வு ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்