பென்டிரைவ்

மும்பையில் உள்ள இஸ்கான் அமைப்பு, கடந்த ஜனவரி மாதம், ‘கீதா சாம்பியன் லீக்’ என்ற தலைப்பில் போட்டி ஒன்றை நடத்தியது. 195 பள்ளிகளைச் சேர்ந்த 4,617 மாணவர்கள் கலந்துகொண்டனர். பகவத் கீதையிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்பட்டன. இதில், மும்பையின் காஸ்மோபாலிட்டன் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும், மரியம் ஆசிஃப் சித்திக் (Maryam Asif Siddiqui) என்ற மாணவி, முதல் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். பரிசைப் பெற்றுக்கொண்ட மரியம், ‘மதங்கள் வேறாக இருந்தாலும் புனித நூல்கள் சொல்வது ஒன்றுதான். பகவத் கீதையும் மனிதநேயம், அன்பு, தியாகம் ஆகியவற்றைத்தான் வலியுறுத்துகிறது. குர்ஆன் நூலும் அதைத்தான் சொல்கிறது. இதை, சிலர் தவறாக எடுத்துக்கொள்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்