ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டிகளுக்கு...

ஒவ்வொரு நாளுமே நமக்குச் சிறந்த நாள்தான். ஆயினும், குறிப்பிட்ட சில நாட்கள் நம் மனதில் நன்கு பதிந்துவிடும். காரணம், அன்றைக்கு ஏதேனும் ஸ்பெஷலாக நடந்திருக்கும். நமக்குப் பிடித்த சாதனையாளர்களின் பிறந்த நாளாக இருக்கும். அன்றைய தினம், அவரைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவோம். உடனடியாகப் புத்தகம் கிடைக்காது. இனி, அந்தக் கவலையே வேண்டாம். ‘ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம் சாதனையாளர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள், உங்களைத் தேடி வருகிறது.

தமிழ்நாட்டு முதல்வர்களில், பேரறிஞர் அண்ணாவுக்கு சிறப்பான இடம் உண்டு. தன் அரசியல் வாழ்வில், குடும்பத்தினர்  நுழைவதை அவர் ஒரு நாளும் அனுமதித்தது இல்லை. அவர் முதல்வராகப் பதவி ஏற்றுபோதும் மனைவியைக்கூட அழைத்துச் செல்லவில்லை. பெரிய பதவியில் இருந்தபோதும், எளிமையாக வாழ்ந்தவர். எழுத்தாற்றலிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கினார். அவரின் வாழ்வில் நடந்த மேலும் பல சுவையான சம்பவங்களை அறிந்துகொள்ள நீங்கள் தயாரா?

இவர் அமெரிக்காவின் அதிபரானபோது, உலகமே வாழ்த்துத் தெரிவித்தது. இவருக்குக் கிடைத்த பெருமைகள், தங்களுக்குக் கிடைத்ததைப் போல கறுப்பின மக்கள் கொண்டாடினர். இவரின் குழந்தைப் பருவத்திலேயே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டனர். தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். கல்விக் கடன் வாங்கியே கல்லூரிப் படிப்பை முடித்தார். அதிபராவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் அந்தக் கடனைக் கட்டி முடித்தார். இவ்வளவு சிறப்புக்குரிய பராக் ஒபாமாவைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்வோமா?

கி்யூபா நாட்டின் முன்னாள் அதிபர், ஃபிடல் காஸ்ட்ரோ.  கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல் ஆட்சியைப் புரட்சி மூலம் அகற்றியவர். வல்லரசான அமெரிக்காவின் பலவித அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், கியூபாவைப் பல துறைகளில் முன்னேற்றியவர். இன்று, சிறந்த மருத்துவச் சேவை தருவதில் உலகத்தின் முன்னணி நாடாக கியூபா திகழ்கிறது. இன்று வரை தன் ஆலோசனைகளால் நாட்டை வழிநடத்தும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் கேட்க வேண்டுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick