Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுட்டி ஸ்டார் நியூஸ்!

விண் துளிகள்!

முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலம், ஸ்புட்னிக்-1.

விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம், லைகா எனும் ரஷ்ய நாய்.

முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற மனிதன், யூரி ககாரின் (Yuri Gagarin).
 
முதல் விண்வெளி வீராங்கனை, வாலென்டினா தெரஸ்கோவா (Valentina Tereshkova)

முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற இந்தியர், ராகேஷ் சர்மா.  விண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற முதல் மனிதர், அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிடோ (Dennis Tito).

கி.உபேந்திர தீர்த்தன்
விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக் மே.நி.பள்ளி,
ஸ்ரீரங்கம்.

நகரும் கற்கள்!

உயிரற்ற கற்கள் தானாக நகர்கின்றன என்றால், ஆச்சர்யம்தான். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், ‘மரணப் பள்ளத்தாக்கு’ எனப்படும் இடத்தில் காணப்படும் கற்கள், ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர்கின்றன. ஒரு வருடத்தில், 860 அடி தூரம் பயணிக்கும் கற்களும் உண்டு. இந்தக் கற்கள் எப்படி நகர்கின்றன என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வரை முழுமையான விடை கிடைக்கவில்லை. இந்தக் கற்களைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகின்றன.

சு.சுரேகா
பாரதியார் மெட்ரிக் மே.நி.பள்ளி,
எழுமலை.

ஆஹா ஆலமரம்!

இந்தியாவின் மிகவும் வயதான ஆலமரம், கொல்கத்தாவின் ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள Great Banyan Tree. உலகின் பெரிய மரங்களில் இதுவும் ஒன்று.

450 ஆண்டுகள் ஆன ஆலமரம், சென்னை அடையாரில் உள்ளது.

400 வயதான ஆலமரம், பெங்களூரின் ரமோஹல்லி (Ramohalli) என்ற இடத்தில் உள்ளது.

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள திம்மம்மா மரிமானு எனும் ஆலமரம், கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம், கபிர்வாட்(Kabirvad) என்ற இடத்தில் உள்ள ஆலமரத்தின் வயது 300.

ஜெ.சந்தோஷ் ராம்
புனித ஜான்ஸ் சீனியர் செகண்டரி பள்ளி, மந்தவெளி,
சென்னை-28.

ஒரே நூல்... ஓஹோ புகழ்!

‘தி யங் விசிட்டர்ஸ்’ என்ற நூலை எழுதியவர், லண்டனைச் சேர்ந்த டெய்சி ஆஷ்ஃபோர்டு (Daisy Ashford). இந்த நூல், 19-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து மேல்தட்டு மக்களைப் பற்றிப் பேசியது. உலகம் முழுவதும் ஆங்கிலம் படித்தவர்களால் அதிகம் புகழப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூலை எழுதியபோது, டெய்சிக்கு 9 வயதுதான். ஒரே நூலில் உலகப் புகழ் பெற்று விட்டார். எழுத்துப் பிழைகளோடு இருந்த கதையைத் திருத்தி வெளியிட்டனர். 18 முறை மறு வெளியீடு செய்யப்பட்டது.

இரா.விஷ்வா,
தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி,
 தேவகோட்டை.

தலைக்கவசத்தின் தந்தை!

வாகனம் ஓட்டுபவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கட்டாயமாக்கப்பட்டிருக்கும்  தலைக்கவசத்தை வடிவமைக்கக் காரணமாக இருந்தவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் எரிக் கார்ட்னர். 1914-ம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்காக, பலவித சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, மோஸ் என்பவரின் உதவியுடன் தலைக் கவசத்தை உருவாக்கினார் எரிக்.

ஒரு மரம், 40 கனிகள்!

நாம் எந்த விதையை விதைக்கிறோமோ, அதுதான் விளையும். ஆனால், அமெரிக்காவில் உள்ள சைராக்ஸ் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர் சாம் வான் அகேன், ஒரே மரத்தில் பல்வேறு பழங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். ஒரே மரத்தில் 40 வகையான கனிகளை காய்க்கச் செய்து, காண்போரை வியக்கவைத்துள்ளார். ‘‘குளிர்காலத்தில் செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் காட்சி அளிக்கும் மரத்தைக் காண மிகவும் ரம்மியமாக இருக்கும், கோடையில் சுவையான பழங்களைத் தரும்’’ என்கிறார் சாம் வான்.

எஸ்.அபிநயா
ஆர்.ஆர்.மேல்நிலைப் பள்ளி,
தோக்கவாடி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
லிட்டர் லிட்டராகப் படிக்கலாம்!
ஒரு தேதி...ஒரு சேதி...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close