ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்!

கஸ்ட் முதல் ஞாயிறு, தேசிய நட்பு தினம். அப்போது, நமது அன்பை நண்பர்களுக்குத் தெரிவிக்கும் அடையாளமாக, ‘ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்’ அணிவிப்போம். அதை நம் கையாலே செய்து அணிவித்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். வாங்க செய்யலாம்!

தேவையான பொருட்கள்: சில்க் த்ரெட் இரண்டு நிறங்களில், கத்தரிக்கோல்.

செய்முறை:

கைக்குத் தேவையான அளவில் இரண்டு நூல்களையும் ஒரே அளவாகக் கத்தரித்து எடுத்துக்கொள்ளவும்.

நான்கு முனைகளும் தொங்குமாறு நூல்களின் நடுவில் பிடித்துக்கொள்ளவும். மேலே ஓர் அங்குலம் விட்டு, முடிச்சுப் போட்டுக்கொள்ளவும்.

முடிச்சுப் பக்கம் ஒருவர் பிடித்துக்கொள்ள, தொங்கும் நான்கு நூல்களில், இடது பக்க முதல் நூலை விட்டுவிட்டு, மூன்று நூல்களில் ஒரு பின்னல் போடவும்.

அடுத்து, மூன்று நூல்களில் முதல் நூலை விட்டுவிட்டு, முதலில் விட்ட நூலை கீழ்ப் பக்கமாக எடுக்கவும். இதே போல வலது பக்க முதல் நூலை விட்டுவிட்டு, இரண்டாவது நூலை முதலில் விட்ட நூலின் கீழ்ப் பக்கமாக எடுத்துப் பின்னிக்கொண்டே வரவும்.

கட்டுவதற்குக் கொஞ்சம் நூல் விட்டு, ஆரம்பத்தில் போட்டது போல முடிச்சுப் போட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான்... ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் ரெடி.

இதுபோல விதவிதமாக உருவாக்குங்கள். நண்பர்கள் கையில் கட்டி, உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

கே.ஆர்.ராஜமாணிக்கம்

ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick