சுதந்திரத் துளிகள்

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பியவர், லோகமான்ய பால கங்காதர திலகர். ‘சுதேசியம்’ என்ற வார்த்தையை முதன்முதலில் தீவிரப்படுத்தியவரும் இவர்தான்.

‘வந்தே மாதரம்’ என்ற சுதந்திர முழக்கப் பாடலை எழுதியவர், பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயா (Bankim Chandra Chattopadhyay). 1882-ம் ஆண்டு வெளியான, இவரது ‘ஆனந்த மடம்’ என்ற வங்காள மொழி நாவலில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை இயற்றியவர், ரவீந்திரநாத் தாகூர். 1911 டிசம்பர் 27-ம் தேதி, கொல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், முதன்முறையாக இந்தப் பாடல் பாடப்பட்டது.

‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்றப் பாடலை, இந்திய சுதந்திரத்துக்கு முன்பே, எழுதியவர் மகாகவி பாரதியார்.

காந்தியின் அகிம்சைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு,

‘கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது’

என்ற சுதந்திரப் பாடலை எழுதியவர், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick