ஸ்மார்ட் கிளாஸ்!

செல்போன் இருந்தால், உலகமே நம்ம கையில். அதில் இருக்கும் செயலி (APPS)ஒவ்வொண்ணும், கட்டணம் வாங்காமல் பல விஷயங்களைச் சொல்லித்தரும் மாஸ்டர். அதில், சுவாரஸ்யமான, யூஸ்ஃபுல்லான சில ஆப்ஸ்...

Colar Mix - Quiver

நாம வரைஞ்ச ஓவியம், உயிர்பெற்ற மாதிரி அசைய ஆரம்பிச்சா எவ்வளவு ஜாலி?

க்யூவர் (Quiver) செயலியின் இணையதளத்தில் இருந்து விலங்குகள் படங்களை ஒரு தாளில் அச்சு எடுக்கணும். அதை கலர் அடிச்சு, உங்கள் மொபைலில் இருந்தோ,  டேப்லெட்டில் இருந்தோ, க்யூவர் செயலியின் மூலமாக கேமராவில் பார்த்தால், உங்க ஓவியம் அசையும், தாவும், ஒலியெழுப்பும்.

Oratios Flute Master

புல்லாங்குழலைப் போல இருக்கும் ஒரு கோட்டையில், கார்னிலியஸ் எனும் நல்ல டிராகன் இருக்கும். ஓராட்டியோ என்கிற கொள்ளையனால் இந்த டிராகனுக்கு ஆபத்து. புல்லாங்குழலை வாசிச்சு, டிராகனுக்கு உதவி செய்யணும். புல்லாங்குழலில் இருக்கும் ஓட்டைகள் மாதிரி, இந்தக் கோட்டையில் இருக்கும் துளைகள் வழியாக நெருப்பை வெளியிட்டு, வௌவால்களை அழிக்கணும். எந்தத் துளைக்கு நேராக வௌவால் பறக்கிறதோ, அந்தத் துளை வழியாக புல்லாங்குழலை வாசிச்சதும், நெருப்பு வெளியாகும். இப்படி, செய்து முடிக்கும்போது,  அருமையான ஒரு டியூனையும் முடிச்சிருப்பீங்க. அதைப் பதிவுசெய்து, ‘‘நான் போட்ட டியூன்” என ஃப்ரெண்ட்ஸ்கிட்டே கெத்து காட்டலாம்.

Endless Alphabet

வார்த்தைகளையும் அதன் பொருள்களையும் கற்பனைத் திறத்தோடு கற்றுத்தரும் ஆப்ஸ். அனிமேஷன் மூலம் சிறுசிறு புதிர்களைக் கேட்டு, ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுக்கும்.  தப்பாகச் சொன்னால் தடை, மார்க் குறைவு  என்ற பயமுறுத்தல் கிடையாது. ஸோ, ரிலாக்ஸாக வார்த்தைகள், வாக்கியங்களைக் கற்கலாம்.

Mini School

பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் சுட்டிகளுக்கான ஆப்ஸ் இது. விளையாட்டு மூலம், தொடக்க நிலைக் கணிதம், கடிகாரத்தில் நேரம் பார்க்கக் கற்பது, நிறங்களைத் தெரிஞ்சுக்கிறது என அழகு ஆப்ஸ். ஒரு ஆக்டோபஸ் ஆசிரியராகவும், ஒரு நண்டு தோழனாகவும் வருவது செம க்யூட்.

- சுப.தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick