ஸ்போர்ட்ஸ் டைம்!

நீச்சல் ஒரு தற்காப்புப் பயிற்சி; மற்றவரைக் காப்பாற்றவும் பயன்படும்.

கப்பல் துறை வேலைகளுக்குச் செல்ல, நீச்சல் அவசியம்.

நீச்சலினால் மூச்சுப் பயிற்சி நம்மை அறியாமலே செய்கிறோம். நுரையீரல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு, நீச்சல் நல்ல தீர்வு.

அதிக உணவு, அல்லது அசைவம் சாப்பிட்டுவிட்டு நீச்சல் அடிக்கக் கூடாது. வெறும் வயிற்றிலும் நீச்சல் அடிக்கக் கூடாது. குறைவான அளவு சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்தே நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும்.

ஆறு வயது சிறுவர்கள், வாரத்துக்கு நான்கு முறையும், 10 வயது சிறுவர்கள், வாரத்துக்கு ஏழு முறையும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

இந்திய   அளவில்்  குறிப்பிடத் தகுந்த நீச்சல் வீரர்கள்: வீர் தவால் காதே, சந்தீப் சஜ்வால்.

நீச்சல் பயிற்சியின்போது, நீச்சல் உடை அணிந்தே பயிற்சி எடுக்க வேண்டும். வேறு உடைகள் அணிந்தால், உங்களுக்கான தனி ஸ்டைலில் பயிற்சி எடுக்க சிரமமாக இருக்கும்.

தமிழக அளவில் குறிப்பிடத் தகுந்த நீச்சல் வீரர்கள்: தனுஷ், முகுந்தன்.

நீச்சலின்போது, உடல், படுக்கைவாட்டில் இருப்பதால், உடலின் ரத்த ஓட்டம் அனைத்துப் பாகங்களுக்கும் எளிதாகப் பாயும்.

தமிழ்நாட்டில் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் நீச்சல் வகைகளையே மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

45 நிமிடங்களுக்கு மேல் நீச்சல் பயிற்சி எடுத்தால், நிச்சயம் இளநீர் அல்லது ஜூஸ் குடித்துவிட்டே தொடர வேண்டும். இடையிடையே தண்ணீர் குடிப்பது அவசியம்.

- வி.எஸ்.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick