மிஸ்டர் முட்டை!

‘கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?’ என்றால், அவ்வளவு சீக்கிரத்தில் விடை சொல்ல முடியாது. ஆனால், ‘கோழி முட்டையில் உள்ள சத்துக்கள், கிடைக்கும் பலன்கள் என்ன?’ எனக் கேட்டால், சொல்லிக்கொண்டே போகலாம்.

 அதிக அளவு புரதச்சத்து உள்ளது. பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட  தாது உப்புக்கள் நிறைந்துள்ளன.

 100 கிராம் முட்டையில், 60 மில்லிகிராம் கால்சியமும் 2.1 கிராம் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளன.

 முட்டையில் உள்ள வைட்டமின் D  சத்து, குழந்தைகளின் எலும்புகள் வலுவடையத் துணைபுரியும்.

 ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும்,  தினசரி உடலுக்குத்  தேவையான வைட்டமின் A சத்து 19 சதவிகிதமும் உள்ளன.

 இதில் உள்ள கொலைன் எனும் சத்து, மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு உதவும்.

 தயாமின், ரிபோஃபிளேவின், போலிக் அமிலம்,வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் நிறைந்தது. முட்டை அடிக்கடி சாப்பிடுவது சருமத்துக்கு நல்லது.

 முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.காலை உணவாக உட்கொள்ளலாம்.

 அர்கிளைன் ஹிஸ்டிடீன் உள்ளிட்ட   9 வகை அமினோ அமிலங்கள், தசைகளை நன்கு வலுவடையச் செய்வதோடு, பழுதடைந்த திசுக்களையும்  சரிசெய்யும்.

 100 கிராம் முட்டையில் 75 கிராம் நீர்ச்சத்து,13.3 கிராம் கொழுப்பு,13.3 கிராம் புரதம்,1.12 கிராம் வைட்டமின் A,D,E சத்துக்கள் நிரம்பி உள்ளன.

- கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick