எங்கள் பள்ளி!

ங்கள் பள்ளியின் உணவு இடைவேளை. மரத்தடியில் அமர்ந்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது, அந்தப் பஞ்சவர்ணக்கிளி பறந்து வந்து, கிளையில் அமர்ந்தது. எங்களோடு பேச ஆரம்பித்தது.

கிளி: ‘‘ஹலோ ஃப்ரெண்ட்ஸ்... நான் ரொம்பத் தூரத்தில் இருந்து வர்றேன். இந்த இடம், இயற்கையான சூழலில் ரொம்ப அழகா இருக்கு. இது எந்த இடம்?’’

மாணவர்கள்: ‘‘இது, மேட்டூருக்கு அருகே கந்தனூர் பஸ் ஸ்டாப் பகுதியில் இருக்கும் ஜெம்ஸ் நகர். நாங்க, ‘ஜெம்ஸ் இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறோம். எங்கள் பள்ளி 2005-ம் ஆண்டு 90 மாணவர்கள், 7 ஆசிரியர்களோடு தொடங்கப்பட்டது. இன்று, 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 55 பணியாளர்களோடு கல்விப் பணியில் சிறப்பாகப் பயணிக்கிறது. எங்கள் பள்ளியின் இயக்குநர், எஸ்.என்.ராஜா. பள்ளியின் செக்ரட்டரி சரோஜினி சீனிவாசன், பள்ளி முதல்வர், டி.பிரகாஷ்.’’

கிளி: ‘‘உங்க வயதுப் பசங்க தினமும் 10 மணி நேரம் படிக்கிறாங்களாமே. நீங்க எப்படி?’’

மாணவர்கள்: ‘‘ரீடிங் என்பது வேறு. எஃபெக்டிவ் ரீடிங் என்பது வேறு. ஒரு விஷயத்தை சரியான வழியில் புரிந்துகொண்டு படிக்கும்போது, நேரம் அதிகம் தேவைப்படாது. இங்கே நாங்கள் கற்பது அந்த முறையில்தான். எங்களை சாதனையாளர்களாக மாற்றவும், அதற்கான வழிகளை நாங்கள் வகுத்துக்கொள்ளவும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து, கலந்துரையாடல் நடத்துவாங்க. எங்கள் பள்ளியின் தாரக மந்திரமே, ‘வாழ்க்கைக் கல்வி + புத்தகக் கல்வி + விளையாட்டுக் கல்வி = ஜெம்ஸ் பள்ளி’ என்பதுதான். இப்படி ஒரு பள்ளியில் படிப்பது எங்களுக்குப் பெருமை.’’

 - எம்.விஜய் ஆகாஷ், எம்.ப்ரவீன் குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick