Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேட்டூரு மண்ணு எடுத்து...

சின்ன வயசுல செங்கல் வெச்சு வீடு கட்டி விளையாடி இருக்கோம். (இப்போ பெரிய ஆளா ஆகிட்டீங்களோனு சைடுல ஒரு குரல் கேட்குது). அந்தச் செங்கல்லை எப்படித் தயாரிக்கிறாங்கனு தெரிஞ்சுக்க, எங்க ஸ்கூல் பக்கத்தில் உள்ள KMP செங்கல் சூளைக்கு ஒரு விசிட் அடிச்சு, செங்கல் சூளை நிறுவனர் பழனிச்சாமியை ரவுண்டு கட்டினோம்.

‘‘எத்தனை வருடங்களாக நீங்கள் செங்கல் சூளை வைத்துள்ளீர்கள்?’’

‘‘நாங்க இங்கே 15 வருஷங்களா சூளை வெச்சிருக்கோம்.’’

‘‘செங்கல்லில் என்ன மண் கலப்பீர்கள்?’’

‘‘களிமண், மணல், செம்மண் இந்த  மூணையும் கலப்போம்.’’

‘‘ஒரு முறை சூளை போட்டால் எத்தனை கல் கிடைக்கும்?

‘‘70 ஆயிரத்துல இருந்து 1 லட்சம் வரை   கிடைக்கும்.’’

‘‘செங்கல் எத்தனை நாள் காய வேண்டும்?’’

‘‘குறைஞ்சது மூணு நாளைக்கு காயணும். அப்புறம் சுட்டெடுக்கணும்.’’

‘‘செங்கல்லை எந்த மாதிரி எரிப்பீங்க?’’

‘‘காய்ஞ்சிருக்கிற செங்கல்களுக்கு இடையிடையே விறகுகளை வெச்சு கல்கோட்டை மாதிரி கட்டுவோம்.  விறகு எரியும்போது அனல் வெளியில போகாதபடி செங்கல் மேல  களிமண்ணால பூசுவோம். விறகுகளை எரியவிடுவோம்.

‘‘எத்தனை நாள் செங்கல் எரிய வேண்டும்?’’

சூளை அஞ்சு நாளைக்காவது எரியணும்.  விறகு எரிஞ்சு முடிக்கும்போது செங்கல்லும் நல்ல பதத்துக்கு வந்துடும். ரெண்டு, மூணு வாரங்கள்ல விற்பனைக்கு அனுப்புவோம்.’’

‘‘இங்கே தயாரிக்கிற செங்கலை எந்த ஊர் வரை சப்ளை செய்வீர்கள்?’’

‘‘இங்கிருந்து திருப்பூர் வரை சப்ளை செய்வோம்.’’

செங்கல் செய்றதைப் பற்றி கேட்டால் மட்டும் போதுமா? ஒரு செங்கலாவது செய்யணும்கிறதுதான் எங்க ப்ளானோட ஃபைனல் டச். அதுக்கு அனுமதி வாங்கி, ‘‘மேட்டூரு மண் எடுத்து, காவிரி ஆத்துத் தண்ணியைக் விட்டு...’’ எனப் பாடிக்கிட்டே செங்கல்லை செஞ்சிட்டோம்ல!

- கங்கேஷா, கபிலன், செளம்யா,  தாரிணி, தனுஷ், தேவதர்ஷினி, ஜெயப்ரியா, சக்திவேல்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஒப்பற்ற வழிகாட்டி!
"நான் சொன்னதும் மழை வந்துச்சா!"
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close