சிரிப்போ சிரிப்பு!

டாக்டர்: ‘‘சார், என்னைத் தெரியுதா? நான் உங்க முன்னாள் மாணவன்.’’
பேஷண்ட்: ‘‘ஐயையோ... பழைய பகையை ஆபரேஷன்ல  காட்டிடாதப்பா!’’

ஆசிரியர்: ‘‘100 விலங்குகளின் பெயரைச் சொல்லு.’’
மாணவன்: ‘‘50 யானை, 50 சிங்கம்.’’

ஓட்டலில் சாப்பிட வந்தவர்: ‘‘சர்வர், அதோ அவர் சாப்பிடுறாரே மைசூர் பாகு. அதைக் கொண்டுவா!”
சர்வர்: “பாதி சாப்பிட்டுட்டாரே பரவாயில்லையா சார்?”

 

ஆசிரியர்: “புலி, ஆட்டைப் பார்த்தது - இது என்ன காலம்?”
மாணவன்: “வேற என்ன சார், ஆட்டின் போதாத காலம்!”

ஒருவர்: ‘‘கஷ்டமான ஆபரேஷனை சக்சஸா முடிச்சிட்டீங்க. கிரேட் டாக்டர் நீங்க.’’
டாக்டர்: ‘‘எல்லாம் ஆண்டவன் செயல்.’’
ஒருவர்: ‘‘அப்போ,  ஆபரேஷன்      பீஸை உண்டியல்ல  போட்டுடவா டாக்டர்?’’

- சே,ஸ்ரீநிதி, சக்திவேல், ஜே.ரஞ்சனா, பி.தேவதர்ஷிணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick