Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேட்டையாடு விளையாடு!

ங்களை சொந்தக் குழந்தைகளாக நினைச்சு  அன்பும் அக்கறையும் கலந்து பாடம் நடத்தும் ஆசிரியர்களை, ஒரு மணி நேரம் குழந்தைகளாக மாற்ற, ஒரு விளையாட்டுக்கு ரெடி பண்ணினோம். கலர் கலரா நிறையப் பலூன்களை ஊதி நூலில் கட்டி கீழே போட்டுட்டோம். ஒவ்வொரு ஆசிரியரையும் அழைச்சு, ‘‘ஒரு நிமிஷம்தான் டைம். அதுக்குள்ளே இங்கே இருக்கிற பலூன்களைப் பார்த்துக்கணும். அப்புறம் கண்களைக் கட்டிடுவோம். நாங்க சொல்லும் கலர் பலூனைத் தேடிப் பிடிச்சு, கால்களால் மிதிச்சு உடைக்கணும். வேற கலர் பலூனை உடைச்சா அவுட்.  சரியான பலூனை உடைச்சா கிஃப்ட். இதுதான் கண்டிஷன்” என்றோம்.

ஒரு மணி நேரம் நடந்த ஜாலி கலாட்டாவின் தொகுப்புதான் இது.

‘‘எத்தனை நாள், பாடம் நடத்துறேன்னு சொல்லி, ‘இப்பவே கண்ணைக் கட்டுதே’னு வடிவேலு மாதிரி எங்களை புலம்ப வெச்சீங்க. இது எப்படி இருக்கு?’’ 

‘‘சீனியர் டீச்சர்னு கூடப் பார்க்காம இவ்வளவு இறுக்கிக் கட்டுறீங்களே. ஆசிரியர்னா அன்பும் மென்மையும் வேணும்ப்பா’’

‘‘மிதிக்கவே பயமா இருக்கே.தீபாவளி பட்டாசு மிச்சம் வெச்சிருந்து, எந்தப் பையனாவது பலூனுக்குள்ளே ஆட்டோபாம் வைக்கலையே.’’

‘‘எந்த மூலையில எந்த ஸ்டூடன்ட் குறும்பு பண்ணிட்டு இருந்தாலும் கண்டுபிடிச்சுடுறதால, உங்களுக்கு எக்ஸ்ரே டீச்சர்னு பட்டப் பெயர் இருக்காம். அதான், ரெண்டு கர்ச்சீஃப் சுத்திக் கொடுத்திருக்காங்க.’’

‘‘பிரின்சிபல் சாருக்கு தரை எதுன்னே தெரியலையாம். அவர் பிரின்சிபல் ஆனதில் இருந்தே தரையில கால் பதியாம இருக்காருனு எல்லோரும் சொன்னது நிஜம்தான் போல.’’

‘‘பலூனை உடைக்கச் சொன்னா, கோழியைப் பிடிக்கிற மாதிரியே வர்றாரே.’’

‘‘இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குத் தொடர்புகொள்ளவும். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.’’

 ஐடியா, ஒருங்கிணைப்பு:

 ஸ்ரீராம், சந்திரமோகன், ஹேம்நாத்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எப்படிக் கிடைக்குது தித்திக்கும் தேநீர்?
எல்லாமே சினிமாதான்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close