இது எங்க ஏரியா!

மரம் செய விரும்பு!

 

எங்கள் பள்ளியின் ஒவ்வொரு மாணவரும், மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். இதற்காக, ‘ஜெத்தா தமிழ்ச் சங்கம்’ மூலம் ‘மரம் செய விரும்பு’ என்ற திட்டத்தில் இணைந்திருக்கிறோம். இதன் மூலம் மாணவர்களுக்கு தென்னங்கன்று, தேக்கு, கொய்யா போன்ற மூன்று மரக்கன்றுகளைப் பள்ளியில் வழங்குவார்கள். எங்கள் வீடுகளில் நட்டுப் பராமரிப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பாகப் பராமரித்த மாணவர்கள் பரிசு பெறுவோம்.   

உடலினை உறுதி செய்!

எங்கள் பள்ளியில் எல்லா  மாணவர்களுக்கும், தினமும் ஒரு பி.டி வகுப்பு உண்டு. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றார் பாரதியார். நாங்கள் தேடித் தேடி விளையாடுகிறோம். கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பம், தடகளம் எனப் பல்வேறு விளையாட்டுகளில், மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகளைக் குவித்துவருகிறோம்.

ஊருக்குநல்லது செய்!

எங்கள் பள்ளியின் சார்பாக, மாதம் தோறும்  ஒரு சமூக விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை நடத்துவோம். கோயில், தேவாலயங்களைச் சுத்தம் செய்கிறோம். 

வழிகாட்டி!

எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பில் படித்த நிகிதா, ஆங்கிலப் பாடத்தில் 197 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். எங்கள் வழிகாட்டியாக அவரிடம் பரீட்சைக்கு நிறைய நிறைய  டிப்ஸ் பெற்றுள்ளோம்.

- பொன்குமரகுரு, சசின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick