ஸ்மார்ட் கிளாஸ்

ஹலோ ரைட்டர்!

உங்கள் கற்பனைத்திறனில் நீங்கள் எழுதிய கதையை, அதற்குரிய படங்களோடு சேர்த்து, ஒரு மின் புத்தகமாக (e-book) உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதற்கான அட்டகாசமான ஆப், Book Creator.நீங்கள் உருவாக்கிய புத்தகத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம். சுட்டி எழுத்தாளர்களுக்கான ஆப் இது.

சீனியர் ஜூனியர்!

ஒரு புதிர்ப் பாதையில் இருக்கும் கணிதப் புதிர்களை, கோலிகளை நகர்த்தித் தீர்க்க வேண்டும். புதிர்ப் பாதையில் இருந்து வெளியேறுவதற்கான சிந்தனை, கணிதப் புதிரைத் தீர்க்கும் கணித அறிவு என கலவையாக அறிவை வளர்க்கிறது Marble math என்ற சூப்பர் ஆப். ஐந்து வயதுச் சுட்டிகளுக்காக Marble math junior என்ற செயலியும் இருக்கிறது.

ஆஹா அறிவுக்கொழுந்து!

 

நுண்ணறிவை அளவிட உதவும் IQ கண்டறிவதற்கான சோதனைகள், புதிர்கள் போன்றவை அடங்கிய What’s My IQ? ஆப், உங்களைச் சுண்டி இழுக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் அளிக்கும் விடைகளையும், வழக்கத்துக்கு மாறாக நீங்கள் சிந்திக்கும் திறனையும் மதிப்பிட்டு, உங்களுடைய நுண்ணறிவு அளவிடப்படும்.

துடிப்பாக கண்டுபிடி!

ஏழு ஆங்கில வார்த்தைகள் பாதிப் பாதியாகப் பிரிக்கப்பட்டு கீழே சிதறிக்கிடக்கும். இந்த ஏழு வார்த்தைகளையும் கண்டுபிடிக்க, ஏழு குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த இரண்டையும் வைத்து, அந்த ஏழு வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் little words என்ற ஆப் நமக்குக் கொடுக்கும் சவால். செம ஜாலியாகத் துப்பறிந்து விளையாடலாம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick