சில துளி 'முக'வரி!

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள்.மொழியின் துணையின்றியே பல உணர்வுகளை வெளிப்படுத்தும் மனித முகம் குறித்த சில ‘முக’வரிகள்...

 மனித உடலில் முகத்தின் தசை அமைப்பு, மற்ற பாகங்களில் இருந்து வேறுபட்டது. மனித முகம் 10,000 வகை பாவனைகளை வெளிப்படுத்தும்.

 நாம் உண்மையாக சிரிக்கையில் உதடுகள் மேல்நோக்கி வளையும். கண்களின் ஓரங்கள் சுருங்கும். பொய்யாக சிரிக்க முயற்சித்தால், உதடுகளை வளைக்கலாம். ஆனால், கண்கள் சுருங்காது.

 மனித முகத்தைச் சுற்றி 14 எலும்புகள் உள்ளன. மனித மண்டையோட்டு எலும்புகளில் அசையும் தன்மைகொண்டது, தாடைப் பகுதி எலும்பு மட்டுமே.

 நமது உதடுகள் மட்டும் ஏன் சிவப்பாக இருக்கின்றன? உதட்டுப் பகுதியில், தோலுக்கு அடியில் நுண்ணிய கேப்பில்லரி ரத்தக் குழாய்கள் உள்ளன. அதிக அளவு ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தம் இங்கே பாய்வதால், உதடுகள் சிவப்பு நிறமாகத் தோன்றுகின்றன.

 உணவை அசைபோட உதவும் தசைப் பகுதி, மனித உடலின் வலிமையான தசைகளில் ஒன்று. தனது எடையைப் போல் 80 மடங்கு எடையை இழுக்கும் திறன்கொண்டது.

 மனித மூக்கு 50,000 வகை வாசனைகளைப் பிரித்து அறியும் திறன்கொண்டது.

 மனித முகம் கடந்த 6 மில்லியன் ஆண்டுகளில் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்துள்ளது என்பதைக் காட்டும் சுவாரஸ்யமான ஒரு நிமிட வீடியோவை, இந்த இணைப்பில் காணலாம்.

https://youtu.be/eGi4Cs7vwuc

- கார்த்திகா முகுந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick