சுவை தரும்... சத்து தரும்... சின்ன வெங்காயம்!

பெரம்பலூரின் ஸ்பெஷல், சின்ன வெங்காயம். வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்துதான் வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது.        அது பற்றி, வெங்காய விவசாயி நடேசன் என்பவரைச் சந்தித்து நாங்கள் அறிந்த தகவல்கள் உங்களுக்காக...

 சின்ன வெங்காயத்தை, ‘சாம்பார் வெங்காயம்’ என்கிறார்கள். 2006 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் இந்த ஊரில் மட்டும் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

 90 நாட்கள் வாழ்நாள்கொண்ட பயிர் இது. மூன்று பட்டங்களில் பயிரான வெங்காயம், சமீப காலமாக தண்ணீர் பிரச்னை காரணத்தால், இரண்டு பட்டங்களில்தான் பயிரிடமுடிகிறது.

 அதிக மகசூல் பெற வேண்டும் என்பதற்காக ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால், மண் பாழாகி விளைச்சல் குறைந்துவிடுகிறது. இப்போது, அந்த நிலை மாறி, பலரும் இயற்கை விவசாயத்தை நோக்கி வருகிறார்கள்.

 தென்னை மட்டை மற்றும் வைக்கோலால் திறந்தவெளியில் காற்றோட்டமான இடத்தில் வெங்காயத்தை மூடிவைப்பார்கள். இதனால், ஆறு மாதங்கள் வரையில் கெடாமல் இருக்கும்.

 வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளது. உடல் பருமனைக் குறைக்கவும், கொழுப்பைக் கரைக்கவும் வெங்காயம் உதவுகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக்கொண்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் வெப்பத்தைச் சீராக்கும்.

- அன்பு வர்ஷினி, மதுமிதா, அபிக்‌ஷா, சமீமா பேகம், திவ்ய பாரதி, பிருந்தா, பர்ஹாநிஸா, ஹரிஸ்குமார், ஜனபாலாஜி, ஜகன்நாதன், பிரனேஷ், தாயுமானவர், பி.கீர்த்திவாசன், கீர்த்திவாசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick