இது எங்கள் இதழ்!

இது எங்கள் இதழ்!

சுட்டி விகடனின் ‘என் பள்ளி... என் சுட்டி’ மூலம், மாணவர்களே பத்திரிகை தயாரிப்பது பாராட்டுக்கு உரியது. நாங்கள் ஏற்கெனவே நிருபர்கள்தான், பத்திரிகை ஆசிரியர்கள்தான். எங்கள் பள்ளி மாணவர்களின் கதை, கவிதை போன்ற படைப்புகளை வாங்கி, ‘பொற்களஞ்சியம்’ என்கிற பெயரில் ஒரு டைஜஸ்ட் தயாரித்து இருக்கிறோம். அறிவியல் மாணவர் கையேடு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் இதழ்களைத் தயாரித்து இருக்கிறோம்.

- நித்யபிரனா, சம்யுக்தா, ரோஷன், மணிமொழி, நித்யஸ்ரீ ஏஞ்சலா ஷைனி, நிவேஷ், ஹன்சின்

ரீசைக்கிள் ரித்திக்!

ரு பொருளை அழிப்பது எளிது. அதனை உருவாக்குவது கடினம். இயற்கையின் கொடையும், பலரின் உழைப்பும் மூலப் பொருளாக, அதில் இருக்கும். அதனால், எந்தப் பொருளாக இருந்தாலும் அதைத் தூக்கி வீசும் முன்பு, இதை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என யோசிக்க வேண்டும். நான் அப்படித்தான் யோசித்தேன்.

விரல்களால் பிடித்து எழுத முடியாத அளவுக்கு சிறியதாகிவிடும் சாக்பீஸ் துண்டுகளை தினமும் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று சேகரிப்பேன். ஓரளவுக்கு சேர்ந்ததும், அதை நன்கு தூளாக்கி, தேவையான அளவு தண்ணீர் கலந்துகொள்வேன். இந்தக் கலவையை சாக்பீஸ் வடிவத்தில் நீளமாக உருட்டி, உலரவைப்பேன்். சுமார் 4 மணி நேரம் உலர்ந்தால், நமக்குத் தேவையான சாக்பீஸ் தயார். இதை வகுப்புகளுக்குக் கொடுப்பேன்.

என்னுடைய இந்த முயற்சியை எங்கள் பள்ளி முதல்வர் பாராட்டி ஊக்கப்படுத்தினார். நீங்களும் செய்யலாமே!  

 - ஆர்.ஆர்.ரித்திக் ராஜ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick