காலம் மாறிப் போச்சு!

ப்போது இருக்கும் டெக்னிக்கல் விஷயங்கள், அந்தக் காலத்திலேயே இருந்திருந்தால்..?

சீதையை ராவணன் கடத்திட்டுப் போயிருவான். ராமன்,  அனுமனிடம் மோதிரத்துக்குப் பதிலா, ஆன்ட்ராய்டு போன் கொடுத்து அனுப்புவார். இலங்கைக்குப் போகும் அனுமன், சீதையைச் சந்திச்சு, ராமனோடு ஃபேஸ் டு ஃபேஸ் சீதையைப் பேச வெச்சிருப்பார்.

-ஆர்.கோபி அனான், எம்.ஹரிஹரன்.

மணிமேகலையின் அட்சயப் பாத்திரத்தோடு, தீவில் மாட்டிக்கொள்ளும் ஆபுத்திரன், அதை இழந்துவிடுகிறார். அப்போது மட்டும் ஆன்ட்ராய்டு போன் இருந்திருந்தால், ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பி இருப்பார். நண்பர்கள் வந்து காப்பாற்றி இருப்பார்கள். அட்சயப் பாத்திரமும் இன்று வரை இருந்திருக்கும்.

 - எஸ்.கிங் ஆடம்ஸ்

புலவர்கள், அரண்மனைக்கு வந்து பாடவேண்டிய அவசியம் இல்லை. வாட்ஸ்அப் மூலமே பாடலை அனுப்பினால், மன்னர் கேட்டுவிட்டு, அதற்கான சன்மானத்தை, நெட் பேங்கிங் டிரான்ஸ்ஃபர்  செஞ்சிருப்பார்.

- ஆர்.லிங்கேஷ், ஆர்.சிபி.

மகாபாரதப் போரில் பாண்டவர், கெளரவர்கள் பக்கம் நிறையப் பேர் இறந்துட்டாங்க. அதுக்குப் பதிலா, வீடியோ கேம் விளையாடி, ஜெயிக்கிறவங்களுக்கு நாடு என முடிவு செய்திருக்கலாம்.

- கார்த்திகேயன், டி.ராம் கண்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick