இது எங்கள் ஸ்பெஷல்!

கூடைப்பந்து விளையாட்டில், எங்கள் பள்ளியைச் சேர்ந்த குழு, தொடர்ந்து நான்கு முறை மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளது. ஒரு முறை அரை இறுதிச் சுற்று வரை சென்றுள்ளது.

ங்கள் பள்ளியில் நடனத்துக்கு சிறப்பு வகுப்புகள் உள்ளன. கிளாசிக், வெஸ்டர்ன் எனப் பல்வேறு வகை நடனங்களை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி எடுத்து, விழாக்களில் பின்னி எடுக்கிறார்கள்.

ராத்தே, யோகா வகுப்புகளும் எங்கள் பள்ளியின் ஸ்பெஷல். கராத்தே விளையாட்டில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல பரிசுகளை வென்று வருகிறார்கள், எங்கள் பள்ளியின் சிங்கக் குட்டிகள்!

 

கிராஃப்ட், ஆர்ட் எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. எவ்வளவு வேணும்னாலும் செஞ்சுருவோம்.

டந்த ஆண்டு எங்கள் பள்ளியின் வி.எஸ்.ரோஷினி, 10-ம் வகுப்புத் தேர்வில் 497 மதிப்பெண்களுடன் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.

டென்னிஸ் விளையாட்டில், எங்கள் பள்ளியின் சூர்யா, விஜய், லஷ்மன் பாபு ஆகியோர்  மாநில அளவில் வெற்றிக் கோப்பையை   பெற்றுள்ளனர்.

ங்கள் பள்ளியின் இசை இரட்டையர்கள், குங்குமப் பிரியா - மங்களப் பிரியா. பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தங்களது இனிய குரலால் கேட்போரைச் சுண்டி இழுக்கும் பலே பாடகிகள்.

ங்கள் பள்ளியின் சுட்டி விஞ்ஞானி, யூசுப் கலாம். ‘Power Generator with Magnet and Coil using Hydraulic’ என்ற தனது கண்டுபிடிப்புக்காக,    43-வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். மின் காந்தத் தூண்டல் மூலம், சிக்கனமான முறையில் மின்சாரம் தயாரிக்கும்  கருவி இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick