ஒரு தேதி...ஒரு சேதி...

ன்புச் சுட்டி நண்பர்களுக்கு, 

ஒவ்வொரு நாளும், நமக்கு புதிதாகக் கிடைத்த வரம்.  ஒவ்வொரு நாளிலும் நாம் சந்திக்கும் மனிதர்களும், நாம் பெறும் தகவல்களும், நமது வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. ஒவ்வொரு தகவலும் உலகத்தைத் திறக்கும் சாவி. ஒரு புத்தகத்தை எழுதும் எழுத்தாளர், அந்தப் புத்தகத்தின் வழியே நமக்கு பல தகவல்களைத் தருகிறார். அதுபோல, உலகம் நமக்கு நிறைய கொடுக்கத் தயாராக இருக்கிறது. அப்படியான ஒரு சாவியாக, 'ஒரு தேதி... ஒரு சேதி’ உங்கள் செவிகளைத் தேடி வருகின்றது. திறந்து பாருங்கள் தோழர்களே!

செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாக வர ஆசைப்பட்டார். புகழுக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அமெரிக்காவில் நிலவிவந்த அடிமை முறையை ஒழித்து, எல்லா மனிதர்களும் சமம் என்று உலகுக்கு  உணர்த்துவதே அவர் நோக்கம்.  அதைத் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். ஜனாதிபதியாக வென்றும் காட்டினார். அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். அமெரிக்காவின் பல மாகாணங்கள் எதிர்த்தன. அதற்கு அடுத்து வந்த தேர்தலிலும் வெற்றி வாகை சூடிய விடுதலை நாயகன் ஆபிரஹாம் லிங்கன் பற்றித்  தெரிந்துகொள்ள வேண்டாமா?

தன் இசையால் உலக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், ராபர்ட் நெஸ்டா மார்லி என்கிற 'பாப் மார்லி’. ஜமைக்காவில் கறுப்பர்கள் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட காலம் அது. இரு குழுக்களுக்கு இடையே சண்டை நடந்த இடத்தில், இவரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. மனைவியோடு இவர் வந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு ஏதும் ஆகவில்லை. இசை நிகழ்ச்சி நடக்காது என்றுதான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், மிகவும் துணிச்சலோடு பாடிய அந்தக் கலைஞனைப் பற்றி இன்னும் அறிந்துகொள்வோமா?

இந்தியாவின் சினிமா விருதுகளில்... மிகப் பெரும் மரியாதைக்கு உரிய விருது, இவர் பெயரால்தான் வழங்கப்படுகிறது. ஓவியர் ராஜா ரவிவர்மாவிடம் ஓவியப் பணி செய்தவர். மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தியவர். அப்போதுதான் லூமியர் சகோதரர்கள் எடுத்த 'கிறிஸ்துவின் வாழ்வு’ திரைப்படத்தைப் பார்க்கிறார். அதன் பிறகு அவரின் கனவு, நினைவு எல்லாமே சினிமா என்றானது. அந்தக் கனவு, இங்கிலாந்து சென்று சினிமா  கற்றுக்கொள்ள வைத்தது. 'தாதா சாகேப் பால்கே’ என்ற அந்த ஒப்பற்ற சாதனையாளர், சினிமா எடுக்க பட்ட சிரமங்களைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick