பென்டிரைவ்

ஷ்யாவின் ஓபீன்ஸ்க் (Obninsk)  நகரில் உள்ள அபார்ட்மென்ட் பகுதியில், ஒரு பெட்டிக்குள் விடப்பட்ட குழந்தையைக் காப்பாற்றியுள்ளது, மார்ஷா என்ற பூனை. கடும் பனிப்பொழிவு நிலவும் நேரத்தில் பெட்டிக்குள் இருந்த குழந்தையைப் பார்த்த மார்ஷா, உள்ளே குதித்து, தன் நீண்ட முடிகளால் குழந்தையைச் சுற்றிக்கொண்டது. வெகு நேரத்துக்குப் பிறகு இதைக் கவனித்த சிலர், உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பூனை, தனது உடலால் அளித்த வெப்பமே, குழந்தையின் உயிரைக்  காப்பாற்றியதாம். இப்போது, மார்ஷா பூனை பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. 

சமீபத்தில், 2014ம் ஆண்டுக்கான புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுள்ளனர். இதன்படி, உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் இந்தியாவில்தான் உள்ளன. மற்ற நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 2011ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் மொத்தம் 1,706 புலிகள் மட்டுமே இருந்தன. 2014ம் ஆண்டில் 2,226 புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. புலிகளைக் காக்க, அரசும் தன்னார்வ அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சியும், மக்களிடையே ஏற்பட்ட விழிப்புஉணர்வும்தான் இந்தப் பெருமிதத்துக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்