புக் கிளப்

வி.எஸ்.சரவணன்

ந்த நகரத்தில், ஒரு குட்டிப் பெண் இருந்தாள். அவளுக்கு, கதை கேட்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால், அவள் வீட்டில் யாருக்கும் கதை சொல்ல நேரம் இல்லை. அம்மா, அப்பா, அண்ணன், அவளுடைய ஆசிரியர் யாருமே கதை சொல்வது இல்லை. அந்த நகரத்துக்கு ஒரு அக்கா வருகிறார். அவரிடம், 'தனக்கு கதைகள் சொல்ல முடியுமா?’ என்று குட்டிப் பெண் கேட்கிறாள். அக்காவும் சந்தோஷமாகக் கதை சொல்கிறார்.

பிறகு, குட்டிப் பெண்ணின் நண்பர்களும் கதை கேட்க வருகிறார்கள். அவள் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் கதை கேட்க வந்துவிட்டார்கள். ஆசிரியர்களும் வந்துவிட்டார்கள். அக்கா சொன்ன கதைகள்,  நகரம் முழுவதும் சொல்லப்பட்டன. கதைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றிச் சொல்லிக்கொண்டனர். காய்கறிக்காரர் வேலைக்குச் செல்லாததால், காய்கறிகளே கிடைக்கவில்லை. பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் நாள் முழுவதும் கதை கேட்பதால், பேருந்துகள் ஓடவில்லை. இப்படியே, நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிட்டது. அந்த நகரத்தின் மேயருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன செய்தாலும் நகரத்து மக்கள் வேலைக்குப் போகாமல், கதை கேட்கவும் சொல்லவுமே ஆர்வமாக இருந்தார்கள். அப்புறம் என்ன ஆச்சு? அதுதான் சூப்பரான க்ளைமாக்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்