அன்புச் சுட்டி நண்பர்களுக்கு,
புதிய ஆண்டின் 15 நாட்கள், மணித் துளிகளாகச் சென்றுவிட்டன. வாழ்வில் பல விஷயங்கள் இப்படித்தான். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துத் தள்ளிபோடும் ஒரு விஷயத்தை, இறுதி வரை செய்ய முடியாமலே போய்விடும். சாதனை படைத்தவர்கள் அனைவரிடமும் ஓர் ஓற்றுமை இருக்கும். அவர்கள், எந்த விஷயத்தையும் அந்த நிமிடத்திலேயே தொடங்கியிருப்பார்கள். நாமும் அவ்வாறே, ஒவ்வொரு நொடியின் மதிப்பை உணர்ந்து செயல்படுவோம். 'ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம், சரித்திரம் படைத்த மனிதர்களைப் பற்றிக் கேளுங்கள். காலத்தைக் கொண்டாடுங்கள்!
றீ இனம், மதம், நிறம், மொழி என எல்லாவற்றையும் கடந்தது, மனிதர்கள் மீதான நேசமும் பாசமும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரண மனிதர், ஜான் பென்னி குயிக். கடல் கடந்த தேசத்தில் இருந்து அரசு அதிகாரியாக வந்தவர். இங்கே இருப்பவர்கள் அடிமை மக்கள் என நினைக்காமல், அவர்களுக்கு சேவகம் செய்யும் ஊழியனாகத் தன்னை நினைத்துக்கொண்டவர். இன்று வரை தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்க, தனது உழைப்போடு பணத்தையும் அளித்தவர். அந்த மாபெரும் மனிதரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஆவலா?
றீ ''எப்போதும், எல்லாவற்றையும் தருவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்தது. சில நேரங்களில் தோல்விகளைச் சந்தித்து இருக்கிறேன். ஆனால், ஒரு நாளும் முயற்சிக்காமல் இருந்தது இல்லை' என்கிறார், 'இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர்’ எனப் போற்றப்பட்ட ராகுல் டிராவிட். கிரிக்கெட், 'ஜென்டில்மேன் விளையாட்டு’ என்ற வார்த்தைக்கு, மிகச் சிறந்த உதாரணமாக விளங்கிய ராகுல் டிராவிட், இன்னும் என்னவெல்லாம் சொல்கிறார் எனக் கேட்கத் தயாரா?
றீ விண்வெளிப் பயணம் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை உடையவர், ராகேஷ் ஷர்மா. யார் இந்த விண்வெளி நாயகன்? எப்படி விண்வெளிப் பயணத்துக்கு தேர்வானார்? அவரின் அந்த முதல் அனுபவம் எப்படி நிகழ்ந்தது?
இன்னும் பல தேதிகள்... இன்னும் பல செய்திகள்...