குஜராத்தி டேங்ளர்!

பிரேமாபடங்கள்: எம்.உசேன், கு.கார்முகில்வண்ணன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...நமக்கு ஈஸியா கிடைக்கும் பொருட்களை வைத்து, அழகான குஜராத்தி ஸ்டைல் டேங்ளர் செய்யலாம் வாங்க. இதை சொல்லித்தருகிறார், பிரமோத் அங்கிள். 

தேவையானவை:  ரெக்கார்டு நோட்டு அட்டை  1 (பைண்டிங்  அட்டையையும் பயன்படுத்தலாம்), விருப்பமான நிறங்களில் 3ஞி கலர்கள், கறுப்பு அக்ரிலிக் பெயின்ட், 6 அல்லது 7ம் எண் தட்டை பிரஷ், விருப்பமான நிறங்களில் பிளாஸ்டிக் அல்லது செராமிக் மணிகள், டிக்கி (சிறு வட்டக் கண்ணாடிகள்), தங்க நிற மணிகள், கறுப்புக் கயிறு  2 மீட்டர், பென்சில்.

செய்முறை:

1.யானை,மயில் உருவங்கள், டைமண்டு போன்ற வடிவங்களை அட்டையில் வரைந்து, தனித் தனியாக வெட்டி எடுங்கள். அந்த  உருவங்களில், மேலும் கீழுமாக இரண்டு இடங் களில் துளைகளைப் போடவும்.

2.அட்டை வடிவங்களில், கறுப்பு பெயின்ட்டை நன்றாகப் பூசி, அரை மணி நேரம் காயவையுங்கள். (குறிப்பு: பெயின்டில் தண்ணீர் கலக்கக் கூடாது. அட்டை ஊறிவிடும்)

3.நன்கு காய்ந்ததும், டெகரேட் செய்யலாம்.  முதலில், மயில் டேங்ளர் செய்வோம். 3ஞி அவுட்லைனர் வண்ணங்களை எடுத்துக் கொள்ளவும்.  தோகைக்கான வண்ணங்களைப் பயன் படுத்திவிட்டு, ஆங்காங்கே சின்னச்சின்னதாக குமிழ்கள் போல பொட்டு வையுங்கள்.

4.அந்தக் குமிழ் மேல், வட்ட வடிவ டிக்கியை வைத்து, பிரஷ்ஷின் முனையால் அழுத்தினால், டிக்கியைச் சுற்றிலும் வளையம் போல பெயின்ட் பார்டர் வரும். பிறகு, மயில் பச்சை நிறத்தில், அந்த வட்ட வளையத்தைச் சுற்றி  தோகை வரையுங்கள். (குறிப்பு: பென்சிலால் முதலில் டிசைனை வரைந்து, பிறகு 3ஞி கலரில் செய்யலாம்).

5.இதே போல, மயிலின் கழுத்து, உடல், முகம், மூக்கு, இறக்கை ஆகியவற்றுக்கு ஏற்ற வண்ணங்களை வைத்து, விருப்பம் போல டிசைன் செய்யுங்கள். (குறிப்பு: ஒவ்வொரு டிசைனையும் போட்டு முடித்ததும் 20 நிமிடங்கள் காயவிட்டு, அடுத்த டிசைன் போடலாம்).

6.இதேபோல, யானை மற்றும் டைமண்டு வடிவங்களுக்கும் டிசைன் செய்து, நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இனி, சரமாகக் கோக்கவும்.

7.  2 மீட்டர் கறுப்புக் கயிறை, மணியில் கோத்து முடிச்சு போட்டு, அதில் செராமிக் அல்லது பிளாஸ்டிக் மணிகளை, நிறத்துக்கு ஒன்று என கோக்கவும். பிறகு, கயிறை யானை வடிவத்தின் கீழே இருக்கும் துளையில் கொடுத்து, மேல் துளை வழியாக வெளியே எடுக்கவும்.

8.மீண்டும் ஒரு செட் மணிகள் கோத்து, அடுத்ததாக டைமண்டு வடிவத்தில் இருக்கும் துளைகளில் கயிறை நுழைத்து இழுக்கவும். மீண்டும் மணிகள்... அடுத்து, மயில்.

9.கடைசியாக, நுனியில் ஒரு வளையம் மாதிரி முடிச்சு போட்டால், குஜராத்தி டேங்ளர் ரெடி!

குறிப்பு: தேவைப்பட்டால், ஸ்ப்ரே வார்னிஷ் அடிக்கலாம். நீண்ட நாளைக்கு வண்ணம் போகாமல் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick