அட்டகாசமாக வரும் அனிமேஷன் ஹீரோக்கள்!

ஷாலினி நியூட்டன்

ருடம் தவறாமல் அனிமேஷன் படங்களை அள்ளிக்கொடுக்கும் ஹாலிவுட், 2015-ம் வருடத்திலும்  பெரிய லிஸ்ட் போட்டு வெச்சிருக்காங்க. ஸ்டார் வார்ஸ் 7, ஜுராஸிக் பார்க் 4, ஃபென்ட்டாஸ்டிக் ஃபோர் போன்ற பிரமாண்டங்களோடு போட்டிபோட்டு கலக்க வர்றாங்க, இந்த அனிமேஷன் ஹீரோக்கள்.

தி ஸ்பாஞ்சிபாப் அவுட் ஆஃப் வாட்டர் (The SpongeBob Out Of  Water): காமிக்ஸ் பாத்திரங்களான ஸ்பாஞ்சிபாப், ஸ்டார் மீன் நண்பன் இணைந்து, கடற்கொள்ளையர்களால் உண்டாகும் பிரச்னையைச் சமாளிக்கும் ஜாலி கலாட்டா கதை. அமெரிக்க டிவி துவங்கி, நம்மூர் கார்ட்டூன் சேனல்கள் வரை, இந்த காமிக் ஹீரோ ஹிட். 2004-ல் வந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக பிப்ரவரி 6, 2015-ல் ரிலீஸ்.

ஹோட்டல் ட்ரான்சில்வேனியா-2 (Hotel Transylvania - 2): மனிதர்களின் தொந்தரவு இல்லாமல், பேய்களுக்காக ஒரு டிராகுலாவால் நடத்தப்படும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். அங்கே வரும் ஒரு மனிதன் என 2012-ல் ஹிட் அடிச்ச ஜாலி படத்தின் இரண்டாம் பாகம்தான் இது. ஒன்லைன் கதையைக்கூட சொல்லாமல், ரகசியமா வெச்சிருக்காங்க. முதல் பாகம் வெளியானது செப்டம்பர் 25, 2012. இரண்டாம் பாகம், அதே செப்டம்பர் 25, 2015-ல் ரிலீஸ்.

தி லிட்டில் ப்ரின்ஸ் (The Little Prince): ஒரு குட்டிப் பொண்ணுக்கு பக்கத்து வீட்டு பைலட் அங்கிள் நண்பராகிறார். அவள்  கையில் கிடைக்கிறது, 'தி லிட்டில் ப்ரின்ஸ்’ என்கிற மேஜிக் கதைப் புத்தகம். அந்தக் கதையால், இருவருக்கும் ஒரு வித்தியாசமான பயணம் உண்டாகிறது. அங்கிருந்து எப்படித் திரும்புகிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ். அக்டோபர் 7, 2015-ல் படம் ரிலீஸ்.

தி பீனட்ஸ் மூவி (The Peanuts Movie): குசும்பு நாய், க்யூட் பையன், அவனோட நண்பர்கள் என, காமிக்கில் கலக்கிய பீனட்ஸ் கதாபாத்திரங்கள்  முதல்முறையாக படமாக வரப்போகுது.  'ஐஸ் ஏஜ் (Ice age), கான்டினென்டல் ட்ரிஃப்ட் (Continental driff)’ படத்தை இயக்கிய ஸ்டீவ் மார்ட்டினோ (Steve martino) இந்தப் படத்தின் இயக்குநர். இந்த காமிக் ஆரம்பித்து 65 வருடங்கள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, நவம்பர் 6, 2015-ல் ரிலீஸ் ஆகிறது.

ஹோம் (Home): எதிரிகளுக்குப் பயந்த வேற்றுக்கிரக ஏலியன் கும்பல், பூமியைத் தங்கள் இருப்பிடமாகத் தேர்ந்தெடுக் கிறாங்க.  அதற்காக பூமிக்கு வரும் ஒரு ஏலியன்,  ஒரு சிறுமியின் காரில் விழுந்துடுது. அவளும் அந்த ஏலியனும் இந்தப் பிரச்னையை எப்படி முடிக்கிறாங்க என்பதே  கதை. குட்டிப் பெண்ணுக்கு, பிரபல பாப் பாடகி ரிஹான்னா, உலகின் டாப் பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் குரல் கொடுக்கிறாங்க. ரிலீஸ் தேதி மார்ச் 25, 2015.

இன்சைடு அவுட் (Inside Out): வால்ட் டிஸ்னி தயாரிப்பு. இப்படியும் கற்பனை செய்ய முடியுமா? என வியக்கவைக்கும் கதை. ஒரு குட்டிப் பெண்ணின் அப்பாவுக்கு புது வேலை கிடச்சு, சான்ஃப்ரான்சிஸ்கோவுக்கு வர்றாங்க. அந்த இடம் அவளுக்குப் பிடிக்கலை. அவளோட மூளையில் இருக்கும் கோபம், பயம், வெறுப்பு, சோகம் போன்ற உணர்வுகள் எல்லாம் கேரக்டர்களாக மாறி, விவாதம் நடத்துதுங்க. கடைசியில், அவள் புதிய இடத்தை ஏத்துக்கிட்டாளா இல்லையா? ஜூன் 19, 2015-ல் ரிலீஸ்.

தி குட் டைனோசர் (The Good Dinosaur): 'டாய் ஸ்டோரி-3’, 'ஃபைண்டிங் நிமோ’, 'தி இன்க்ரீடிபிள்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய பீட்டர் சோன் (Peter Sohn), இந்தப் படத்தின் இயக்குநர். தாவர உண்ணி வகையைச் சேர்ந்த ஒரு க்யூட் டைனோசருக்கும் கற்கால சிறுவனுக்கும் இடையே உருவாகும் நட்பும் காமெடியும்தான்  கதை. நவம்பர் 15, 2015-ல்  ரிலீஸ்.

டாப் கேட் (Top Cat): போலீஸ் துறையில் வேலை செய்யும் ஒரு பூனைக்கும் அதன் நண்பர்களுக்கும்  மேலதிகாரியாக வருபவரால்  சரியான குடைச்சல். அதை, நண்பர்களுடன் சேர்ந்து பூனை எப்படி சமாளித்தது  என்பதுதான் படத்தின் கதை.  ஸ்பானிஷ் மொழியில், 2011-ல் வெளியான படம். ஆகஸ்ட் 7-ம் தேதி அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick