Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

நீங்கள் பேருந்தில், பள்ளிக்குப் போகிறவரா? உங்கள் நண்பரோடு சுவாரஸ்யமாகப் பேசுவதற்கான தகவல்களை ‘ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம் நாங்கள் தருகிறோம்.  நண்பர்களுக்கு அதைக் கூறுங்கள். அவர்களையும் கேட்கச் சொல்லுங்கள். தகவல்களால் நிறையட்டும் உங்கள் பயணம்!

‘சகோதர, சகோதரிகளே...’ - அமெரிக்காவில் இப்படித்தான் பேச்சைத் தொடங்கினார் விவேகானந்தர். லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் என்று அழைப்பதைவிட, இது கூடுதலான அன்பைத் தருகிறது என்று கூட்டத்தினர் எழுந்து நின்று கை தட்டி, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். சிறு வயதில், ‘யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடாதே. அதை உன் அறிவால் பகுத்தறிந்து உண்மையை உணர்ந்துகொள்’ என்று விவேகானந்தரை தட்டிக்கொடுத்து வளர்த்தவர், இவரது தாய். பல நாடுகளுக்குப் பயணம் செய்து, எல்லா மனிதர்களுக்கும் அன்பைப் போதித்த சுவாமி விவேகானந்தர் பற்றி சொல்லச் சொல்ல நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம்...

தமிழ்நாட்டில் எந்த அரசுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தாலும், நினைவுக்கு வரும் பெயர் காமராஜர். இவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தபோது, கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்தபோதும், இவரைப் புகழ்ந்து பேச யாரையும் அனுமதிக்க மாட்டார். அதையும் மீறி யாராவது புகழ்ந்து பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று அடக்கிவிடும் அதிசய மனிதர். எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாக வாழ்ந்த இவரது வரலாற்றை, அவசியம் அறிய வேண்டும்!

மகேந்திர சிங் தோனிக்கு, சின்ன வயதில் கிரிக்கெட்டைவிட கால்பந்து என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு கிரிக்கெட் போட்டியில்  விக்கெட் கீப்பருக்கு அடிபட்டுவிட்டது. அதனால், தோனியை கீப்பிங் செய்யச் சொன்னார்கள். அதுவே, அவரின் வாழ்க்கையையே மாற்றியது. இன்று, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகப் புகழ்பெறச் செய்துவிட்டது. அந்தப் புகழ் மிக்க பயணத்தில் சந்தித்த சவால்கள் அதிகம். அவற்றை அறிந்துகொள்வோமா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சூப்பர் 6
பென்டிரைவ்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close