Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுட்டி ஸ்டார் நியூஸ்!

துருப்பிடிக்காத இரும்பு!

துருப்பிடிக்காத இரும்பு,  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless steel). மண் பானை, இரும்பு, அலுமினியம் என இருந்த நம் வீட்டுச் சமையலறையில், இன்று 90 சதவிகிதம் இருப்பது, இந்த உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள்தான். இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், தனி உலோகம் இல்லை. இரும்பையும் குரோமியத்தை யும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உருகவைத்துக் கலந்து உருவாக்கும்  உலோகம். இது, ஹாரி பிரியர்லி (Harry Brearley) என்பவரால் 1913-ல் கண்டறியப்பட்டது.

நா.தவனீஸ்வரன்

கார்மல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

ஈரோடு.

கிரேஸி ஹவுஸ்!

வீடுகளை, நாம் சதுரம் மற்றும் செவ்வக வடிவங்களில் கட்டுவோம். ஆனால், வியட்நாமில் ‘கிரேஸி ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் வீடுகள், மிகவும் விசித்திரமாக உள்ளன. விலங்குகளின் முகங்கள், பெரிய மரம், பூச்செடிகள் படர்ந்த குகை, மரக் கிளைகளில் கூடுகள் என ஒவ்வொரு வீடும்  ஒரு கருத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளனர். இந்த வீடுகளில் வாழ்பவர்கள், ‘இதுபோன்ற வீடுகளில் வசிக்கும்போது, இயற்கையோடு ஒன்றி வாழும் எண்ணமும் அதிக மகிழ்ச்சியும் உண்டாவதாகச் சொல்கிறார்கள்.

செ.சுபஸ்ரீ

பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

சிங்கம்புணரி, சிவகங்கை.

கருவிகளும் பயன்களும்!

கப்பல் செல்லும் திசையை அறிய – மரைனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass)

கடலின் ஆழத்தை அளக்க -ஃபாதம்மீட்டர் (Fathommeter)

விமானம் பறக்கும் உயரத்தை அறிய – ஆல்டிமீட்டர் (Altimeter)

மேகங்களின் திசை, உயரம் அறிய – நீபோஸ்கோப் (Nephoscope)

காற்றின் வேகம், திசை அறிய – அனிமோமீட்டர் (Anemometer)

காற்றின் ஈரப்பதத்தை அறிய – ஹைக்ரோமீட்டர் (Hygrometer)

க.கிரண்ராஜ்

சேதுபாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி,

அம்பத்தூர், சென்னை-53.

க்ரே கலரு கிளி!

கிளி என்றதும் அழகான பறவை, நாம் சொல்வதைச் சொல்லும், சர்க்கஸ் செய்யும், ஜோதிடத்தில் சீட்டு எடுத்துக்கொடுக்கும் என சில விஷயங்கள் தெரியும். இதில், உலகம் முழுவதும் 315 வகையான கிளிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்திறன் உண்டு.குறிப்பாக, ஆப்பிரிக்காவில் உள்ள ‘க்ரே பேரட்’ என்ற கிளி இனத்துக்கு, நான்கு வயது குழந்தைக்குரிய அறிவு உள்ளதாம். நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளை நினைவில்வைத்துச் சொல்லும். மனிதர்களின் பேச்சை அப்படியே உள்வாங்கிப் பேசும் ஆற்றல்கொண்டவை.  இந்த க்ரே பேரட், 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.

ச.மதுரவாணி

ஜேப்பியார் பள்ளி,

செம்மஞ்சேரி, சென்னை.

சிறிய பறவை!

உலகிலேயே மிகச் சிறிய பறவை, கியூபா நாட்டில் உள்ள ’மெல்லிஸுகா ஹெலனே’ (Mellisuga helenae) என்ற தேன்சிட்டு. இந்தப் பறவையின் எடை, 1.68 கிராம்தான். அலகு முதல் வால் வரை இதன் நீளம், 2.25 இன்ச். பெண் பறவையைவிட, ஆண் பறவையின் கால்கள் சிறியவை. ஆண் தேன்சிட்டு வேகமாகச் சிறகுகளை அடிக்கும் திறன்கொண்டது. ஒரு வினாடிக்கு 80 தடவைகள் இறக்கையை அடிக்கும். அப்போது ’விர்’ என்ற சப்தம் மட்டும் கேட்கும். மேலே, கீழே மற்றும் பின்னேயும் பறக்கும். நின்ற நிலையிலேயே மிதக்கும். இவை சிலந்தியின் வலையைக்கொண்டு மரக்கிளைகளில்  கூடுகளை அமைத்துக்கொள்ளும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால், இந்தப் பறவைகளுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். சிறிய சிலந்திகளும் ஈக்களும்தான் இவற்றின் உணவு என்றாலும், மிகவும் பிடித்த உணவு, பூந்தேன். எனவே, மலர்களைத் தேடி இவை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பறக்கும்.

ஆர்.வி.சிவஸ்ரீ

மேரி மாதா , சி.எம்.ஐ.பப்ளிக்  ஸ்கூல்,

தேனி.

மெகா கோபுரம்!

சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரம், ஜெட்டா (Jeddah). இங்கே 1,000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கிங்டம் டவர்’ என்று அழைக்கப்படும் இந்தக் கட்டடம், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 200 மாடிகள் வரை கட்டப்பட உள்ளது. 360 குடியிருப்புகள்,  ஹோட்டல்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும். சுமார் 1.23 பில்லியன் டாலர்கள் செலவுசெய்து, 2013-ல் தொடங்கப்பட்ட இந்தக் கட்டடத்தின் பணிகள், 2018-ல் நிறைவடைய உள்ளது. இப்போது, 828 மீட்டர் உயரத்துடன்  உலகின் உயரமான கட்டடமாக ‘புர்ஜ் கலிபா’ உள்ளது. கிங்டம் டவர் கட்டடம் முழுமை பெற்றால்,  இதுதான் உலகின் மிக உயரமான கட்டடமாக இருக்கும்.

நா.தவனீஸ்வரன்

கார்மல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

ஈரோடு.

 

துருப்பிடிக்காத இரும்பு,  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless steel). மண் பானை, இரும்பு, அலுமினியம் என இருந்த நம் வீட்டுச் சமையலறையில், இன்று 90 சதவிகிதம் இருப்பது, இந்த உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள்தான். இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், தனி உலோகம் இல்லை. இரும்பையும் குரோமியத்தை யும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உருகவைத்துக் கலந்து உருவாக்கும்  உலோகம். இது, ஹாரி பிரியர்லி (Harry Brearley) என்பவரால் 1913-ல் கண்டறியப்பட்டது.

 

நா.தவனீஸ்வரன்

கார்மல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

ஈரோடு.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
தேடிவந்த சேவை விருது!
தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close